| Profession | அறிஞர் |
|---|
நாகை சிக்கல் கிராமத்தில் நாராயண பொன்னையா -ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 06.04.1932
அன்று பிறந்தார். இவர் ஒன்றரை வயது குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தார்.
அதன்பின் தாயின் அன்பிலும் அரவ ணைப்பிலும், கூட்டுக் குடும்பச் சூழலிலும் வளர்ந்தார்.
நாகப்பட்டினம் தேசிய உயர் நிலைப் பள்ளியில் கல்வியை முடித்த இவர், சிதம்பரம் கீழ
மூங்கிலடி காந்தி ஆசிரமத்தில் காந்திய ஆதாரக் கல்வி ஆசிரியப் பயிற்சியை 1953-இல்
நிறைவு செய்தார்.
1955-1960இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மு.வ. அவர்களின்
வழிகாட்டுதலில் பி.ஏ. ஆனர்ஸ், எம்.ஏ., ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
1960-இல் சந்திரா எனும் தாய்மாமன் மகளைச் சீர்திருத்த முறையில் எளிமையாகவும், காந்திய
நெறியிலும் மணந்தார்.
1953-இல் ஆசிரியர் பயிற்சிக் கல்வியை முடித்தவுடன், தமது சொந்த ஊரான சிக்கலில் உள்ள
முத்துக்குமார சுவாமி ஆரம்பப் பள்ளியில் இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி னார்.
1960-இல் டாக்டர் மு.வ. நிர்வாகியாக இருந்த திரு.வி.க. பள்ளியில் தமிழ்த்துறைப்
பொறுப்பாசிரியராகச் சில காலம் பணி யாற்றினார்.
1961-இல் டாக்டர் மு.வ. வின் வழி காட்டுதலின்படி ஆந்திர மாநிலம், சித்தூர் அரசினர்
கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு இவர் ஒருவரே அனைத்துமாக
இருந்து தமிழ்த் துறையை வளர்க்க அரும்பாடு பட்டார். 1971-இல் திருவேங்கடன் பல்கலைக்
கழகத்தில் முதுகலை மாணவர்க்கு விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக
கழகத்திலேயே என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பின் படிப்படியாக
இணைப் பேராசிரி யராக, பேராசிரியராக, துறைத் தலைவராக, கல்விக் குழு உறுப்பினராக
இருபத்தோராண்டு கள் பணியாற்றினார். தனது நெறியாள்கையில் 15 முனைவர்களையும் 15 ஆய்வியல்
நிறைஞர் களையும் பட்டம் பெறச் செய்தார்.
இலக்கியம், ஆராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, புதினங்கள், சிறுகதைத் தொகுப்பு, குழந்தைப்
பாடல்கள், மொழிபெயர்ப்புகள் என 31 நூல் களின் ஆசிரியர். உள் நாட்டிலும் வெளி நாடு
களிலும் பல்வேறு கருத்தரங்குகளிலும் மாநாடு களிலும் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட
ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார்.
‘ஸப்தகிரி’ எனும் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ் மாத இதழுக்குப் பதிப்பாசிரி
யராக பணியாற்றினார். ஆழ்வார் திவ்விய பிரபந்தத் திட்டச் சிறப்பு அலுலராகப் பணி யேற்று
நூல் பலவும் வெளியிட்டுள்ளார். இவரது ‘தாயகம்’ புதினத்திற்கு தமிழக அரசு விருதும்,
1988-இல் ஆந்திர மாநில அரசின் ‘நல்லாசிரியர்’ விருதும், கேரள ஆளுநர்
பி.இராமச்சந்திரன் அவர்களின் பரிசும் பெற்றுள்ளார். முதுமை காரணமாக 03.01.2010 அன்று
காலமானார்.