| Profession | அறிஞர் |
|---|
குமரி மாவட்டம், இளை யான்விளையில் வேலாயுதப் பெருமாள்- பாக்கியமுத்து இணையருக்கு
23.11.1929 -இல் பிறந்தார்.
1950-இல் பாளையங் கோட்டை தூய சவேரியர் கல் லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம்
பெற்று, வருவாய் ஆய்வாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
1958-இல் திருமணம் நடை பெற்றது. துணைவி: இலட்சுமி தங்கம். 3 மகள்கள், 1 மகன்.
1958-இல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆரல் வாய்மொழி அரசு உயர்நிலைப் பள்ளியில்
ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1960-இல் புதுக் கோட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்
பி.டி. முடித்து, 1961 தொடங்கி 1967 வரை முன் சிறை உயர்நிலைப் பள்ளியில்
ஆசிரியராகப் பணியேற்றார்.
கருத்தரங்கில் ஓர் அமர்வுக்குத் தலைமையேற்று சிறந்ததோர் ‘சங்ககால வரலாறு’ எனும் ஆய்வுக்
கட்டுரையைச் சமர்ப்பித்தார். 1980-இல் கல்லூரி தமிழாசிரியர்களையும் வரலாற்று ஆசிரியர்
களையும் இணைத்து ஓர் ‘ஆய்வு இயக்கம்’ தொடங்கி நடத்தி வந்தார். கல்லூரி ஆசிரியர்களுக்காகப்
போராடி திருச்சி சிறையிலும், பின்னர் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்காகப் போராடி
வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
01.03.1987-இல் ஓய்வு பெற்றார். 31.05.1988 வரை பணி நீடிப்பிலிருந்தார்.
1964 தொடங்கி இதுவரை 14 ஆய்வு நூல்களை யும், 96-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களை
யும் இயற்றியுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவத்திற்காக ஆய்வறிக்கையை 2009-இல்
வழங்கியுள்ளார்.
சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பொதுவாழ்வியல் மையம், தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம்
ஆகியவை இணைந்து ‘வரலாற்று ஞாயிறு’ (2009) விருதினையும், ‘கிளைரோ இந்தியா’
அமைப்பு ‘தலைசிறந்த வரலாற்று அறிஞன்’ விருதினையும், டாக்டர் பட்டத்தையும் வழங்கி
சிறப்பித்துள்ளன.