| Profession | அறிஞர் |
|---|
சிவகங்கை நெற்குப்பை கிராமத்தில் பார்வதி ஆச்சி – தெ.சு.மு.முத்துராமன் செட்டியார்
தம்பதியருக்கு 12.08.1928 அன்று பிறந்தார். இயற்பெயர்: இராம. பெரியகருப்பன்.
செல்லப்பெயர்: சிங்காரம். இவரை வளர்த்தோர்: கலியாணி ஆச்சி – அரு.மு. இராமசாமிச்
செட்டியார் தம்பதியினர்.
நெற்குப்பை திண்ணைப் பள்ளியிலும், பள்ளத்தூர் செட்டியார் உயர்நிலைப் பள்ளி யிலும் பள்ளிப்
படிப்பை முடித்தார். சிவபுரி சன்மார்க்கசபை கணேசா செந்தமிழ்க்கல்லூரியிலும்,
திருவையாறு அரசர் கல்லூரியிலும் வித்துவான் படிப்பை முடித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப் பையும், பொருளியலில் இளங் கலைப் பட்டத்தையும்,
தமிழில் முதுகலைப் பட்டத்தையும், ‘சங்கப் பாடல்களில் இலக்கிய மரபுகள்’ என்ற தலைப்பில்
முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1949- 49ல் ஈரோடு, மகாசன உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிய பின்,
1949- 61இல் காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்த ரேசுவரர் உயர்நிலைப் பள்ளியில் முதனிலை
தமிழாசிரியராகவும், 1961 – 71இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாள
ராகவும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1971 – 73இல் தமிழ் விரிவுரையாளராகவும்,
1973 — 75 இல் தமிழ் இணையப் பேராசிரியராகவும், 1975- 80இல் அஞ்சல்வழிக் கல்வி
தமிழ்த்துறை யிலும், 1980- 89இல் தமிழியல் துறைத் தலைவ ராகவும், 1989 சூலை முதல்
திசம்பர் வரை தமிழியற்புலம் சிறப்புப் பேராசிரியராகவும், 1990 -92இல் பல்கலைக் கழக
சிறப்பு நிலைப்பேராசிரியராகவும், 2000-இல் தமிழக அரசின் தமிழ் இலக்கியச்
சங்கப்பலகையின் ‘குறள் பீட’த்தில் ஓராண்டும் பணியாற்றினார்.
30.08.1954 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார்: சிந்தாமணி. தெய்வத்தமிழ்
நெறியில் கம்பனடிப்பொடி சா.கணேசன் திருமணம் செய்து வைத்தார். சீர்திருத்தச் செம்மல் சொ.
முருகப்பா தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. கவியரசு முடியரசன், இராம. பெரிய
கருப்பன் போன்றோர் கலந்து கொண்டனர்.
தமிழண்ணல் 79 ஆய்வு நூல்கள், 5 கவிதைத் தொகுதிகள், 2 வழிபாட்டுப் பாடல் தொகுதிகள், 12
கட்டுரைத் தொகுதிகள் ஆகியவற்றை எழுதி யுள்ளார். 6 நூல்களை பதிப்பித்துள்ளார்.
இவரது நெறியாள்கையில் 42 ஆய்வாளர்கள் இளமுனைவர் / முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’ (1989), நல்லாசிரியர் விருது (1986), ‘நச்சு
வளையம்’ நாவலுக்கு இரண்டாம் பரிசு (1982), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பேரவைத்
தமிழ்ச் செம்மல் விருது (1998), பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பர் பவளவிழாவில் ‘தமிழியக்கச்
செம்மல்’ விருது (2003), தொல்காப்பியர் விருது (2011) உள்ளிட்ட சிறப்புமிகு
விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளார்.