| Profession | அறிஞர் |
|---|
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், மேலத் திருப்பூந்துருத்தியில் பிச்சையா
நாட்டார் – தென்காவேரி தம்பதியருக்கு 22.5.1940 அன்று பிறந்தார்.
1962-இல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். பின்னர் ‘இளங்கோவடிகளும்
திணைக் கோட்பாடுகளும்’ எனும் தலைப் பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.
1962-இல் சென்னை தங்கச் சாலையிலுள்ள தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில்
இரண்டாம் நிலை தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1965-இல் பெரம்பூர் சமாலியா
மேனிலைப் பள்ளியில் முதல் நிலைத் தமிழாசிரியர் ஆனார். 1969-இல் கரந்தைத் தமிழ்ச் சங்கப்
புலவர் கல்லூரியில் பேராசிரியராகவும், பின்னர் கல்லூரித் துணை முதல்வராகவும், பொறுப்பு
முதல்வராகவும் பணியாற்றினார். 1973 முதல் 1998-இல் பணி நிறைவு பெறும்வரை 24 ஆண்டுகள்
முதல்வராகவும் பணியாற்றினார். பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரி களிலும் பல்வேறு
பொறுப்புகளை வகித்தார்.
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி கலை பண்பாட்டு அறக்கட்டளையை நிறுவி யதன் வழி
கல்லூரி நடத்த 7.5 ஏக்கர் நிலத்தை வாங்கி கல்லூரியை நிறுவினார்.
இவர் எழுதிய கட்டுரைகள் ‘கண்ணகி சிலம் பீந்த காரணம்’ (1986), ‘என்று தணியும் எங்கள்
அடிமையின் மோகம்’ (1989), ‘மரூஉ மொழிகளும் வழுஉ மொழிகளும்’ (1989), ‘சிந்தனைச்
சுடர்’ (1993), ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரம் வினா விடை’ (2004), ‘தமிழ்க் குன்றம்’
(2007), ‘சான் றோர் சிந்தனைகள்’ (2008), ‘கனவும் கற்பனையும்’ (2008) என எட்டு நூல்
களாக வெளிவந்துள்ளன.
‘தமிழ்ச் சான்றோர் பேரவை’யின் ‘தமிழ்ச் சான்றோர் விருது’ (2001), 2002-இல் கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் ‘தமிழவேள் த.வே. உமாமகேசு வரனார் விருது, 2004-இல் புதுக்கோட்டை
திருக்குறள் கழகம் வழங்கிய ‘குறள்நெறிப் பேரவைச் செம்மல்’ விருது, 2009-இல் மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்தின்’தமிழ்ப்பேரவைச் செம்மல்’ விருது, 2009-இல் தஞ்சைப் பெரிய
கோயில் சதய விழாக் குழுவின் ‘மாமன்னன் இராசராசன் விருது’, உலகத் தமிழர் பேரமைப்பின்
‘உலகப் பெருந்தமிழர் விருது’ போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
பேரா.பி.வி. 17.11.2010-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள்,
துணை வேந்தர்கள், சட்டமன்ற நாளுமன்ற உறுப் பினர்கள், , அனைத்துக் கட்சியினர், மாணவர்கள்,
பொதுமக்கள் என தஞ்சை மாநகரம் அதுவரை கண்டிராத வகையில் கலந்து கொண்டனர். பழ.நெடுமாறன்
தலைமையில் இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இரா. இளவரசு மலர்க் குழு தலைமையில் ‘மௌனம்
கவிந்த வகுப்பறைகள்’ எனும் முதலாமாண்டு நினைவு மலர் வெளியிடப்பட்டது.