| Profession | அறிஞர் |
|---|
நெல்லை கோடகநல்லூரில், 23.02.1939 அன்று பிறந்தார். தந்தையார் ஸ்ரீநிவாச ஐயங்கார்,
தாயார் பத்மாசனி. 1957- இல், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தையும்,
1958-இல் முதுகலைப் பட்டத்தையும், 1961- இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சிறப்புப்
பேராசிரியராக கோட்டையம் மகாத்மா காந்திப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியுள்ளார்.
பிரேமா நந்தகுமார் சிறந்த வாசகர், இலக்கியப் படைப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர்,
மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல தளங்களில் சிறந்து விளங்குகிறார். இந்திய
கதையாசிரியர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர், ‘மத்திய திபெத்திய உயராய்வுக் கல்விக்
கழகத்தின் அலுவலக ஆலோசனைக் குழு உறுப்பினர், ஆந்திர பல்கலைக் கழக ஆங்கிலப் பாடத் திட்ட
அமைப்புக்குழுவின் உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சென்ட் உறுப்பினர் ஆகிய
பொறுப்புகளை வகித்துள்ளார்.
1944- இல் இவரது தந்தை பாகல்கோட்டில் உள்ள பஸவேஷ்வர் கல்லூரியில் பணியாற்றத்
தொடங்கியபோது, இவர் முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார். அங்கே கன்னட வழியில்
பாடம் கற்பிக்கப்பட்டதால் அம்மொழியை கற்றுக் கொண்டார். 1946- இல் ‘நந்துவின் தம்பி’ என்ற
தமிழ்க் கதையைக் கன்னட மொழி பயிற்சிக்காக மொழிபெயர்த் தார். அவருடைய ஆசிரியர் அக்கதை
மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டி, சில திருத்தங்களைச் செய்து அவ்வூரிலிருந்து
வெளிவந்த ‘ஜெய கர்நாடகா’ என்ற வார இதழுக்கு அனுப்பி வைத்தார். அக்கதை அப்பத்திரிகையில்
பிரசுர மானது. அப்போது அவருக்கு வயது எட்டு.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒன்பது ஆங்கில விமர்சன நூல்கள். இரண்டு தமிழ் விமர்சன
நூல்கள், எட்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆறு நூல்கள்,
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஒரு நூல், தெலுங்கிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு
இரண்டு நூல்கள் ஆகியவற்றை மொழியாக்கம் செய்துள்ளார். இரு நூல்களைப் பதிப்பித் துள்ளார்.
தமிழக, இந்திய அளவில் மட்டுமல்லாது மலே சியா, ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடு களுக்கும்
சென்று தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.
சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது, அமரர் ராமரத்தினம் விருது, எம்.ஜி.ஆர்.
விருது, சேக்கிழார் விருது, மணிமேகலை விருது, உ.வே. சாமிநாதையர் விருது, கலைஞர்
மு.கருணாநிதி விருது உட்பட பல்வேறு விருதுகளை வழங்கப் பெற்றுள்ளார்.
தி இந்து, டெக்கான் ஹெரால்டு, வளரும் விவ சாயத் தமிழகம், ஸ்ரீ அரவிந்தர் செயல்பாடுகள்,
வேதாந்த கேசரி, ஆத்ம ஜ்யோதி, அமுதசுரபி, பிரபுத்த பாரதா, திருக்கோயில், சப்தகிரி,
மதர் இந்தியா, சரத்தா, ஸ்ரீ நரசிம்ம பிரியா, தி ஸ்கூல் ஆகிய இதழ்களில் தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்.