| Profession | அறிஞர் |
|---|
01.02.1950 அன்று பிறந்தார். புனைபெயர் இளையநந்தன். வட ஆற்காடு மாவட்டம், போளூர்
இவரது சொந்த ஊர். தற்போது திருச்சி மாவட்டம், உரையூரில் வசிக்கிறார்.
காட்டுப்பாடி தூய தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சேலம் அரசு
கல்லூரியில் தமிழில் இளங்கலையில் மீனாட்சி சுந்தரனாரிடம் பயின்றார். தூய சவேரியார்
கல்லூரியில் முதுகலை பயின்றார்.
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் பயிற்றுநர் பணியில் சேர்ந்தார். 1985-இல்
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு நடத்திய தமிழ் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டம்
பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் ‘அசோகமித்திரன் புனைகதை களில் மனிதன்’ என்னும் தலைப்பில்
ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வேடு நூலாக வெளிவந்துள்ளது. 2005-08இல்
தலைவராகப் பணியேற்றார். பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில் ஜெர்மன், ஜப்பான், இலங்கை, மொரி
சியஸ், கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டில் இருக்கின்ற தமிழ் ஆர்வலர்களை
ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பாக நடத்தினார்.
6 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 30 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆகியோருக்கு
வழிகாட்டியாகச் செயலாற்றியுள்ளார்.
தலித் கிறித்தவர் விடுதலை இயக்கத் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவராகவும், அய்க்கப்
மாணவர் இயக்கத்தின் தலித் ஆணைக்குழுவின் மாநில தேசிய ஊக்குநராகவும் செயலாற்றியுள் ளார்.
தமிழ்நாடு மனித உரிமைக் கண்காணிப் பகத்தின் மனித உரிமைக் கல்விக்கான மூன்றாவது
கூட்டத்து ஒருங்கிணைப்பாளர், உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு
பொறுப்புகளில் இருந்திருக்கின்றனர்.
தலித் சமூக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் ஆங்கில மொழியில் உள்ள
விடுதலைச் சிந்தனை சம்பந்தப்பட்ட பதினான்கு நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். ஏழு
கூட்டுப்படைப்புகளையும், ஐந்து இலக்கிய ஆய்வு நூல்கள், ‘இயேசுவாஞ்சலி’ என்னும் தலைப்பில்
துளிப்பாக்கள் படைப்பில் வெளியிட்டுள்ளார்.
இவரது படைப்புகள் மறை அருவி, மனித மேம்பாடு, தலித் முரசு, தலித் முழக்கம், புதிய
கோடாங்கி, அன்னம், வளம் ஆயம், தளிர்கள், மீண்டும் தேன்மழை, மனித உரிமைக் கங்காணி உட்பட
பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்ற மொழிபெயர்ப்பாளர் அரங்கில் ‘சிறந்த மொழி
பெயர்ப்பாளர்’ விருது, தமிழ்த்திணை அமைப் பின் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் பொறுப்பிலிருந்தும், பேராசிரியர் பணியிலிருந்தும் 2008-இல்
பணிநிறைவு பெற்றார். அதன்பின் தம்முடைய எழுத்துப்பணி, இலக்கியத் தேடல் பணி, மொழி
பெயர்ப்புப் பணி ஆகியவற்றைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.