தமிழறிஞர் ஜெ.சண்முகம்

தமிழறிஞர் ஜெ.சண்முகம்

Profession அறிஞர்

Biography

நாகை வேதாரண்யம் செட்டிப்புலம் கிராமம் ஜெகநாதன் -அஞ்சம்மாள் தம்பதியருக்கு 23.9.1948
அன்று பிறந்தார்.

1973-இல் நாகப்பட்டினம் கனகசபை தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். 1974-இல்
சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டமும், அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். பட்டங்களையும் பெற்றார். மேலும் யோகா, சோதிடவியல்
ஆகியவற்றில் பட்டயங்களும் பெற்றுள்ளார்.

1981-இல் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பளளியில் தமிழாசிரியராகப்
பணியைத் தொடங்கியவர் அங்கேயே பணி நிறைவு பெற்றார். 2007 முதல் சீர்காழி பெஸ்ட் ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராகவும், தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

7 கவிதை நூல்களையும், 12 உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். தமிழும் சமயமும்
வளர்ச்சியுற பல்வேறு அமைப்பிலும் மன்றத்திலும் பங்கேற்றுத் திறம்படச் செயலாற்றியுள் ளார்.
இலக்கிய மாநாடு, சமய மாநாடு, உலகத் தமிழ் மாநாடு, தமிழாசிரியர் கழக மாநாடு
போன்றவற்றில் கலந்து கொண்டு பல்வேறு கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

500-க்கு மேற்பட்ட சமய, இலக்கியச் சொற் பொழிவுகளை நிகழ்த்தியவர். 200க்கு மேற்பட்ட
கவியரங்கக் கவிதைகளை வழங்கியவர்.

1977-இல் வை. சகுந்தலாவைத் திருமணம் புரிந்தார். இவர் சீர்காழி ச.மு.இ. மேனிலைப்
பள்ளியின் தமிழாசிரியை. பின்னாளில் நல்லாசிரியர் விருது பெற்றார். இவர்களுக்கு
ச.செந்திலருள், ச.சிவனருள் என இரு மகன்கள்.

தமிழுக்கும் சமயத்திற்கும் இவர் ஆற்றிய அரும்பணிக்காக 2013-இல் திருவாவடுதுறை ஆதினம்
‘சைவத் தமிழ்ச் சீலர்’ விருதையும், 2010-இல் கோலாலம்பூர் இலக்கியக் கருத்தரங்கில் டத்தோ
எம்.சரவணன் ‘மறுமலர்ச்சிப் பாவலர்’ விருதையும், 2009-இல் திருச்சி தமிழ்ச் சங்கத்தில்
துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ ‘தமிழ் மாமணி’ விருதையும், 2012-இல் முனைவர் பொற்கோ
‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர்’ விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். மேலும் பல்வேறு
அமைப்புகள் ‘பாரதி நேயர்’, ‘தமிழ் வித்தகர்’, ‘திருக்குறள் செல்வர்’, ‘கம்பன் புகழ்ப்
பாவலர்’, ‘கவிமுரசு’, ‘கண்ணியச் செம்மல்’, ‘சித்தாந்த இரத்தினம்’, ‘மனவளக்
கலைத்தொண்டர்’, ‘கவிச்செல்வர்’, ‘ஆய்வியல் அறிஞர்’, ‘பாரதி கவிச்செல்வர்’, ‘ஆன்மீகச்
செம்மல்’, ‘வாழ்த்துப்பா வித்தகர்’, பெண்ணுரிமை கட்டுரை ஆய்வாளர்’, ‘கவிச்சுடர்’,
‘இலக்கியச் சுடர்’, ‘பைந்தமிழ்ப் பாவலர்’, ‘திருமுறை நெறிச்செல்வர்’, ‘கவித்தென்றல்’,
போன்ற ஏராளமான பட்டங்களையும் விருது களையும் பெற்றுள்ளார்.