பேராசிரியர் பீ.மு.அஜ்மல்கான்

பேராசிரியர் பீ.மு.அஜ்மல்கான்

Profession அறிஞர்

Biography

6.11.1950 அன்று தேனி கம்பம் நகரில் பிறந்தார். இவரது தாய் மைதீன் பாத்திமா. தந்தை
முகம்மது இப்ராகிம்.

பள்ளிக் கல்வியை கம்பம், ஏல விவசாயச் சங்கப் பள்ளியிலும், மேல்நிலை மற்றும் இளநிலை பட்டப்
(பியூசி மற்றும் பிஎஸ்ஸி) படிப்பை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலும், மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறையில் முதுகலைப் பட்டத் தையும் (1974)
பெற்றார்.

பேராசிரியர் முத்துச்சண் முகனார் நெறியாள்கையில் ‘பிரமலைக் கள்ளர் பேச்சுத் தமிழ்’ எனும்
தலைப்பில் ஆய்வு செய்து 1979-இல் முனைவர் பட்டம் பெற்றார். இடையில், 1977-இல் ‘பிரமலைக்
கள்ளர் சமுதாய மொழியியல்’ எனும் நூலை வெளியிட்டார். மேலும், மொழியியல், மலையாளம்,
காந்தியச் சிந்தனை, கல்வெட்டியல், மொழிபெயர்ப்பியல், பயன்பாட்டு மொழியியல், அரபுமொழி
ஆகிய துறைகளில் பட்டயம் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

முனைவர் பட்டம் பெற்ற அதே ஆண்டிலேயே (1979) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
தொடங்கப்பட்ட இஸ்லாம் மற்றும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் இவருக்கு உதவி ஆசிரியர்
பணி கிடைத்தது. அதே ஆண்டு நவம்பர் 7 இல் நிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு
பபிதா, ஷப்னம் என இரு மகள்கள்.

பதினோரு நூல்களை எழுதியுள்ள இவர், எட்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். இந்நூல்கள்
ஒவ்வொன்றும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு மிகச்சிறந்த பங்களிப்பாகவும்
அடித்தளமாகவும் விளங்குகின்றன.

இவரது வழிகாட்டுதலில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

மதுரைக் காமராசர் பல்கலைக் கழக சமயங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதநேயச் சிந்தனைப்
புலத்தின் ஒருங்கிணைப்பாளர், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்,
கல்விப் பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேலும், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர், திராவிட
மொழியியற் குழு உறுப்பினர், இந்தியத் தத்துவக் கழகம், உலகத் தமிழ்க் கலாச்சார மையம் ஆகிய
அமைப்புகளில் ஆயுட்கால செயற்குழு உறுப் பினர், பல்வேறு சமூகப் பண்பாட்டு நல்லி ணக்கக்
குழுக்களின் செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை ஏற்று செயலாற்றியுள்ளார்.

இந்திய வாழ் முஸ்லிம் சமூகத்தவரில் தமிழில் முதல் முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரிய
இவர், ‘இஸ்லாமியத் தமிழ்ச் செம்மல்’, ‘இஸ்லா மியத் தமிழ் அறிஞர்’, ‘தமிழறிஞர்’, ‘தமிழ்ச்
செம்மல்’ போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.