வ.ஞானப்பிரகாசனார்

வ.ஞானப்பிரகாசனார்

Profession அறிஞர்

Biography

கடலூர் கருங்குழி இ.வடிவேலர் – மயிலம்மை தம்பதியருக்கு 21.8.1951 அன்று பிறந்தார்.

புரூகீசுபேட்டையில் தொடக்க கல்வியையும், திருப்பாதிரிப்புலியூரில் உயர்நிலை கல்வியையும்
பயின்றார். 1969-இல் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புதுமுக வகுப்பினை முடித்து,
1973-இல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். 1975-இல் சென்னை
சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.

மாணவப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டவராகவும் படைப்பாற்றல் கொண்டவராகவும் இருந்தார்.

இவர்தம் ஆசிரியப் பணியை தாம் படித்த பள்ளியிலேயே தொடங்கினார். அதன்பின் கொடையாளர்களின்
உதவியுடன் பதிப்பித்து வருகிறார்.

இவர் ஆசிரியர் பணியில் சேரும் முன்பே ஆன்மிகப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். வள்ளலார்
கொள்கையைப் பரப்புவதையே தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு செயலாற்றுகிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சன்மார்க்க சங்கத்தில் 1976-இல் சொற்பொழிவாற்றியுள்ளார்.

திருவருட்பாவை 40க்கும் மேற்பட்ட சிறு சிறு நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
மணவிழா, மணிவிழாக்களின் சுபசெலவாக நூல்களும் அமையவேண்டும் என்பதற்காக சமயம்,
சன்மார்க்கம், இலக்கியம் சார்ந்த நூல்களையும் மலர்களையும் தயாரித்துத் தந்துள்ளார்.

செ.நா.பாளையம், காரைக்காடு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் தொடர்ந்தார். இவரது பணிக்
காலத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்த காரைக்காடு பள்ளியை பொதுமக்கள் உதவி யுடன்
கடுமையாகப் போராடி உயர்நிலைப் பள்ளியாக 1982-இல் உயர்த்திக் காட்டினார். அதன்பின்
1988-இல் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகள் பணியாற்றி
அப்பள்ளியிலேயே பணிநிறைவு பெற்றார்.

புலவர் வ.ஞானப்பிரகாசம், பழைய நூல்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரிய
நூல்களைத் தேடிக் கண்டு பிடித்து நல்ல நூல்கள் பிழையில்லாமல் வரவேண்டும் என்பதற்காக பிற
அறிஞர்களின் நூல்களையும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பதிப்பித்துத் தந்துள்ளார்.

புலவர் வ.ஞானப்பிரகாசனாரைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் ‘இலக்கியச் செம்மல்’,
‘நல்லாசிரியர் விருது’, ‘ஞானியாரடிகள் விருது’, ‘திருநெறித் தொண்டர்’ , ‘கற்பனைக்
களஞ்சியம் நம்பி’, ‘ஆய்வுரைத் திலகம்’, ‘விரிவுரை வித்தகர்’, ‘தெய்வக் காவலர்’ ,
‘சிவசேவா ரத்ன’, ‘சுந்தரத் தமிழ் ஞாயிறு’ போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும்
வழங்கிச் சிறப்பித்துள்ளன.