முனைவர் எ.மு.ராஜன்

முனைவர் எ.மு.ராஜன்

Profession அறிஞர்

Biography

புதுச்சேரி, எல்லப்பிள்ளைச் சாவடி கிராமத்தில் முருகேசன் – பவுனாம்பாள் தம்பதியருக்கு
29.10.1951-இல் பிறந்தார். தந்தை ஓர் ஆலைத் தொழிலாளி.

எல்லப்பிள்ளைச் சாவடி, ரெட்டிப்பாளையம், முத்த ரையர்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில்
பள்ளிக் கல்வியை முடித்த ராஜன், கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புகுமுகக் கல்வியை
முடித்தார். புதுவை தாகூர் கலைக் கல்லுரியில் பொருளாதாரத்தில் இளங்கலை (பி.ஏ.)
பட்டமும், அதே கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) பட்டமும் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்
கழகத்தில் இள முனைவர் (எம்.ஃபில்.) பட்டத்தையும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் முனைவர்
(பிஎச்.டி) பட்டத்தையும் பெற்றார்.

1973-இல் படிப்பு முடிந்த அடுத்த நாளே ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’வில் எழுத்தர்
வேலையில் சேர்ந்தார். பின்னர் தாம் படித்த புதுவை தாகூர் கலைக் கல்லூரியில் துணைப்
பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 3 மாதங்களில் மாஹே மகாத்மா காந்தி அரசுக் கல்லூரிக்கு
மாற்றலானார். அங்கு 5 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் 1980-இல் தாகூர் கலைக் கல்லூரிக்கு
மாற்றலானார். அங்கு பத்தாண்டுகள் பணியாற்றிய பின், பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 2
ஆண்டுகளும், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 23 ஆண்டுகளும் பணியாற்றி,
2013இல் பணி நிறைவு பெற்றார். ஓய்வுக்கு முன் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்
தின் இயக்குநராகவும், தாகூர் கலைக் கல்லூரி யின் முதல்வராகவும் பணியாற்றினார்.

மாஹேயில் பணிபுரிந்தபோது 1975-இல் ராஜனுக்கும் கிறித்துவப் பெண்ணான ராணிக்கும்
வ.சுப்பையா தலைமையில் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இளவரசி,
இளங்கோ, சர்மிளா என மூன்று மகள்கள். சர்மிளாவுக்கு ஒன்பது வயது ஆகும்போது 1996-இல்
மனைவி காலமானார். பின்னர் ஆனந்தியை மறுமணம் புரிந்தார்.

இவர் கவிதைகள், கதைகள், புதினங்கள், ஆய்வுகள், நாட்டுப்புறவியல் என தமிழில் 32
நூல்களும், பொருளாதாரம் சார்ந்த 6 ஆங்கில நூல்களும், சுற்றுச்சூழல், சமூகம் சார்ந்த 7
நூல்களும் என 44 நூல்களை எழுதியுள்ளார். ஜப்பான், சீனா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ரோம்,
ஆஸ்திரியா, லிச்டென்ஸ்டீன், ஜெர்மனி, பிரான்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த
அனுபவங்களையும் பயண நூல்களாக எழுதியுள்ளார். ‘நாட்டுப்புறப் பாடல்களில் பொருளாதாரம்’
நூலுக்காக தமிழக அரசின் விருதையும், ‘மரம் இல்லாத காடுகள்’, ‘மனிதன் எனும் அற்புதம்’,
‘எட்டாவது அறிவு’ ஆகிய மூன்று நூல்களுக்காக புதுவை அரசின் கம்பன் விருதுகளையும்
பெற்றுள்ளார்.

புதுவை அரசின் கலைமாமணி விருது, சேவரத்னா, எழுச்சித் தமிழ்வேந்தர், சிறந்த கல்வி
யாளர், இந்தோ – நேபாள நட்புறவு விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.