| Profession | அறிஞர் |
|---|
மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையேயுள்ள பூவையில், கோ.சுப்பிரமணியம் –
பத்மாவதி (பொண்ணுக் கண்ணு) இணையர்க்கு 06.03. 1952-இல் பூவை சு.ஜெயராமன் பிறந்தார்.
பூவை, நெல்லிக்குப்பம் கீழ்ப் பட்டாம்பாக்கம் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து, தருமை
ஆதினத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற் றார். 1976-இல் குமாரபாளையம் ஆசிரியப்
பயிற்சி கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று மீண்டும் பூவையில் உழவரானார்.
1979இல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சவகர் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு
ஆசிரியரானார். மூன்று மாதங்களில் மூன்றாம் வகுப்புக்கு உயர்வு பெற்றார். இதே ஆண்டு
வரதராசன்பேட்டை தொன் போசுகோ உயர்நிலைப் பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகப் பணியில்
சேர்ந்தார். பதினெட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மேனிலைத் தமிழாசிரியராக பதவி உயர்வு
பெற்று 2010இல் பணி நிறைவு பெற்றார். அதன்பின் மீனாட்சி இராம சாமி கல்வியியல்
கல்லூரியில் துணை முதல்வராகவும், தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றிக்
கொண்டிருக்கிறார்.
பள்ளியின் கலை இலக்கிய மன்றங்களில் நாடகம், கதைப்பாட்டு, வில்லுப்பாட்டு முதலான வற்றைப்
படைத்து, இயக்கி, நடத்தும் வந்துள் ளார். கவிதை நாடகங்கள் படைப்பதில் வல்லவர். கவியரங்கம்,
பட்டிமன்றங்களில் தலைசிறந்து விளங்கியுள்ளார்.
முன்னைய ஓவிய ஆசிரியரும், தமிழாசிரியரு மான கு.கலியமூர்த்தியுடன் இணைந்து மதுவின்
கேடு குறித்த பொம்மலாட்டமும், ஆழிப்பேரலையின் கேட்டினை விளக்கும் மனிதப் பொம்மலாட்டமும்
படைத்து இயக்கி நடித்துமுள்ளார். ‘இலக் கியத்தில் கலைமகள்’ எனும் நூலையும் தந்துள் ளார்.
‘எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று’ இவரது சிறுகதை நூல். ‘அரும்பு’ எனும் இதழை
நடத்தியுள்ளார். ‘வளர்முகில்’ இதழின் ஆசிரியர். 50 சிற்றிலக்கிய நூல்களைப்
பதிப்பித்துள்ளார்.
20.10.1980இல் புதுச்சேரி, பாரதிதாசன் மாண வரும் கல்வே கல்லூரியின் தலைமை ஆசிரியரு
மான கோ.சானகிராமர் – இராமாமிர்தம் தம்பதி யரின் மகள் புட்பலதாவைத் திருமணம் செய்து
கொண்டார்.
மதுரை காமராசரில் அஞ்சல் வழியில் தமிழில் முதுகலை (எம்.ஏ.), ‘காந்தியச் சிந்தனை’ யில்
முதுகலை, அண்ணாமலையில் தமிழில் முது கல்வியியல் (எம்.எட்.,) மதுரை காமராசர்
பல்கலையில் முதுநிறைஞர் (எம்.ஃபில்), காரைக்குடி அழகப்பாவில் கோயிற்கலையில் முது
சான்றிதழ் (றி.நி.ஞிவீஜீ. வீஸீ ஜிமீனீஜீறீமீ கிக்ஷீts) போன்ற பட்டங்களைப் பெற்ற இவர்,
பணிநிறைவுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி சமால் முகம்மது கல்லூரி யில் தமிழ்த்
துறையில், ‘மூதறிஞர் அடிகளாசிரி யரின் தொல்காப்பியப் பதிப்புகள் பன்முக நோக்கு’ எனும்
தலைப்பில், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்ந்துள்ளார்.