எழுத்தாளர்

  • அனுராதா ரமணன்

    தஞ்சாவூரில், 29.06.1947 அன்று பிறந்தார். இளங்கலை பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றார். 18-ஆம் வயதில் இவருக்குத் திருமணமானது. ஆனால், இவரது 28-ஆம் வயதில் கணவர் ரமணன் இறந்துவிட்டார். சுயவாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான பல்வேறு அனுபவங்களைப் பின்னர் தான் பணியாற்றிய இதழ்களில் எழுதி வாசகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளார். இவருக்கு சுபா, சுதா என இரு மகள்கள். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் திறமையும் ஆர் வமும் கொண்ட இவர், சென்னை…

  • எம்.ஏ.நுஃமான்

    இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் அரபு ஆசிரியராக இருந்த மக்புல் ஆலிம் -சுலை லீ உம்மா தம்பதியருக்கு 10.08.1944-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியைக் கல்முனைக்குடியில் உள்ள பள்ளி களில் கற்றார். அட்டானைச் சேனை அரசினர் ஆசிரியர் கல் லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். இலங்கைப் பல்கலைக் கழக கொழும்பு வளாகத்தில் இளங்கலை 1973-இல் மொழியியல் பட்டத்தையும், 1975-இல் இளநிலை ஆய்வுப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1982-இல் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டத்தையும் பெற்றார்….

  • வண்ணதாசன்

    திருநெல்வேலியில், மார்க்சிய அறிஞர் தி.க.சிவசங்கரன்- தெய்வானை தம்பதியருக்கு 22.8.1946 அன்று பிறந்தார். இயற்பெயர் கல்யாணசுந்தரம். பின்னாளில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மீது கொண்ட ஈடுபாட்டினால் ‘வல்லிக்கண்ண தாசனான இவர், அப்பெயரைச் சுருக்கி ‘வண்ணதாசன்’ என வைத்துக் கொண்டார். இந்து நடுநிலைப் பள்ளியிலும், சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்து, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். 1967-இல் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பட்டம் பெற்றார். 1970-இல் ‘ஸ்டேட் பாங்க் ஆஃப்…

  • இரா.இராஜசேகரன்

    இரா.இராஜசேகரனார் லால்குடியில் ‘திருக்குறள்வேள்’ ஜி. வரதராஜன் பிள்ளை- தர்மாம்பாள் தம்பியருக்கு 15.05.1942 அன்று பிறந்தார். இவரது தந்தை திருக்குறள், திருவாசகம், திரு மந்திரம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய தமிழறிஞர். இராஜசேகரன், 1953-இல் மேலையூர் இராமலிங்கம் -கௌரி அம்மாள் தம்பதியருக்கு சுவீகாரப் புதல்வரானார். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியிலும், மயிலாடுதுறை முனி சிபல் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தூய வளனார் கல்லூரியில் 1961-இல் இளநிலை கணிதம் பட்டம் பெற்றார். 1963-இல் சென்னை சட்டக் கல்லூரியில்…

  • சிவசங்கரி

    சென்னையில் சூரியநாராயணன் – இராஜலட்சுமி தம்பதியருக்கு 14.10.1942 அன்று பிறந்தார். சென்னையிலேயே பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தனது 21-ஆம் வயதில் 1963-இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. கணவர்: டி.எஸ். சந்திரசேகரன். திருமணத்திற்குப் பிறகு ஓர் ஆண்டு போபாலிலும், பின்னர் சென்னையிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தனர். இவரது கணவர் 1984-இல் இயற்கை எய்தினார். சிவசங்கரி திருமணத்திற்குப் பின் சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்தார். இவருக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லை. இச்சூழலில் ஒரு வளைகாப்பு…

  • ரெ.கார்த்திகேசு

    மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பீடோங் எனும் சிற்றூரில் ரெங்கசாமி – சிந்தாமணி தம்பதியருக்கு 24.8.1940 அன்று பிறந்தார். தனது ஏழாவது வயதில் (1947) ஹாவர்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர் சில பள்ளிகளில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். தான் படித்த பள்ளியிலேயே அவருக்குத் தற்காலிக ஆசிரியர் பணி கிடைத்தது. ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி னார். 1961 தொடங்கி 1976…

  • க.வை.லிங்கம்

    மலேசியாவில் சிலாங்கூர் பத்துதீகா இராசாக் தோட்டத்தில் 2.1.1942-இல் பிறந்தார். அதன்பின் இவரது குடும்பத்தினர் மலாக்கா மாநிலத்தில் உள்ள புக்கிட் அசகான் தோட்டத்திற்கு பிழைப்பு தேடிக் குடியேறினர். பெற்றோர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டனர். அங்கு லிங்கம் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர் அம்மாவுடன் பால் வெட்டும் வேலைக்குச் சென்றார். பின்னர், மலாக்காவில் ஒரு காபி கடையில் தங்கி வேலை செய்தார். இரவு பகலாக உழைத்தும் கடை முதலாளிக்கு தன்னிடம் நன்றியுணர்வு இல்லை என்பதை உணர்ந்தவுடன்…

  • கொ.ம.கோதண்டம்

    இராஜபாளையத்தில் தனஞ்செயகொட்டு முக்கலமாட சாமிராஜா – சீதாலட்சுமியம்மா தம்பதியருக்கு 15.9.1938 அன்று பிறந்தார். இவரது துணைவியார் ராஜேஸ்வரி கோதண்டம். குறளமுதன், இளங்கோ என இரு மகன்கள். குடும்ப வறுமையினால் ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவர், ஒரு பெட்டிக் கடையில் ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தார். எனினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகம் சென்று சிறுவர் நூல்களைப் படித்து வந்தார். ஒரு சிறுவர் இதழில் ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’, ‘பல நாள் வாசகன் ஒரு நாள்…

  • சூர்யகாந்தன்

    கோவை பேரூர் ராமசெட்டிபாளையம் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: மாரப்ப கவுண்டர் – சின்னம்மாள் தம்பதியர். விவசாயக் குடும்பம். எம்.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.ஃபில்., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றுள்ள இவர், கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில் பல்வேறு இலக்கிய இதழ்கள் இவருக்கு அறிமுகமாகி எழுதத் தொடங்கினார். இவரது ‘உழைக்கும் வர்க்கம் உறங்குமோ’ என்ற முதல் கவிதை ‘மனிதன்’ இதழில் 1973-இல் வெளிவந்தது. ‘தண்டிக்கப்படாத குற்ற வாளிகள்’ எனும் முதல் சிறுகதை ‘தாமரை’ இதழில் 1974-இல் வெளிவந்தது….

  • அதிரை மு.முஹம்மதுதாஹா

    அதிராம்பட்டினத்தில் முகம்மது மீராசாகிபு – ஜொகரா தம்பதியருக்கு 04.08.1940-இல் பிறந்தார். இவரது 4-ஆம் வயதில் இவரது தந்தை இறைவனடி சேர்ந்தார். இறைபக்தி மிகுந்த தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆதிரையிலுள்ள ஆரம்பப் பாடசாலையிலும், காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி யிலும் பள்ளிக் கல்வியை முடித்தார். காதிர் முகைதீன் கல்லூரியில் பி.ஏ., சரித்திரம் பட்டம் பெற்றார். (இடையில் உத்திர பிரதேசத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ‘பயோகெமிஸ்ட்ரி’ ஓராண்டே படித்தார்.) காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றிய ‘தமிழ்க் கடல்’…