| Profession | எழுத்தாளர் |
|---|
இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் அரபு
ஆசிரியராக இருந்த மக்புல் ஆலிம் -சுலை லீ உம்மா தம்பதியருக்கு 10.08.1944-இல்
பிறந்தார்.
பள்ளிக் கல்வியைக் கல்முனைக்குடியில் உள்ள பள்ளி களில் கற்றார். அட்டானைச் சேனை அரசினர்
ஆசிரியர் கல் லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். இலங்கைப் பல்கலைக் கழக கொழும்பு
வளாகத்தில் இளங்கலை 1973-இல் மொழியியல் பட்டத்தையும், 1975-இல் இளநிலை ஆய்வுப்
பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1982-இல் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டத்தையும்
பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேரா.
குமாரசாமி இராசா மேற்பார் வையில் ‘தமிழ், சிங்கள மொழி களின் பெயர்த் தொடர் அமைப்பு:
ஒரு முரண்நிலை ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1989-இல் முனைவர் பட்டம் பெற்றார்.
முதுகலைப் பட்டத்திற்கு ‘மட்டக் களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை’ எனும் ஆய்வேடு
அளித்தார்.
1976-1990 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழ கத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய
நுஃமான், 1991-இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும்,
2001-இல் பேராசிரியராகவும் பணி உயர்வு பெற்றார். இடையில் 1998 மார்ச் முதல் ஜூன் வரை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையில் வருகைதரு பேராசிரிய ராகப்
பணியாற்றினார். 1999-2000இல் இலங்கை திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திலும், கிழக்குப்
பல்கலைக் கழகத்திலும், 2007-2008இல் மலேசியாப் பல்கலைக் கழகத்திலும், சிங்கப்பூர் சிம்
பல்கலைக் கழகத்திலும் வருகைதரு பேராசிரி யராகப் பணியாற்றினார். 2009-இல் பணி நிறைவு
பெற்றார்.
இவரது மனைவி லத்தீபா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இலங்கை அரசின் பல்கலைக் கழகம்
சார்ந்த பல்வேறு கல்விக் குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவிலும்,
அயல் நாட்டுத் தேர்வாளராகவும், இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின்
இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிற நாடு
களிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு களில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை
வழங்கியுள்ளார்.
1977-இல் இவரது முதல் நூலான ‘தாத்தா மாரும் பேரர்களும்’ தொடங்கி, 2014-இல்
வெளிவந்துள்ள ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ வரை 18 நூல்களை எம்.ஏ.நுஃமான்
தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். 16 நூல்களை பதிப்பித்துள்ளார். 8 நூல்களை
மொழிபெயர்த்துள்ளார். 30 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இலங்கை அரசின் கலாசூரி, கவர்னர் விருது, சாகித்திய ரத்தினா போன்ற விருதுகளை
நிராகரித்த நுஃமான், ‘விளக்கு’ விருதை மட்டும் பெற்றுக் கொண்டார்.