எழுத்தாளர்

  • க.இராசவேலு

    திருவரங்கம்,கீழவாசல் அ.கந்த சாமி மேஸ்திரி – சின்னம்மை தம்பதியருக்கு 1936 கார்த்திகை மாதம் 5-ஆம் நாள் பிறந்தார். திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். திருச்சி தேசியக் கல்லூரியிலும், தூய வளனார் கல்லூரியிலும் பயின்று 1956-இல் பொருளியலில் பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். 7.11.1962 அன்று செண்பக வள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு வான்மதி என்றொரு மகளும், மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்….

  • அரிமதி தென்னகனார்

    திண்டிவனம் அரிராமன் -ஆண்டாள் தம்பதியருக்கு 12.3.1934 அன்று பிறந்தார். இயற்பெயர்: அரி.நாமதேவன். திண்டிவனம் குஷால் சந்த் உயர் தொடக்கப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார். திண்டிவனம் துணை ஆட்சியரும் தமிழ் அறிஞருமான பாஸ்கரத் தொண்டைமான் வழங்கிய பரிந்துரையினால் மயிலம்ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1948 வரை பயின்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் 1956 முதல் 1957 வரை தமிழ்ப் புலவர் சான்றிதழ் பெற்றார்….

  • பரிதிதாசன்

    கோலாலம்பூரில் உள்ள ஒரு சிற்றூரில் திரு.லெ.பொன்னு சாமி – திருமதி க.சாரதாம்பாள் தம்பதியருக்கு 24.8.1934 அன்று பிறந்தார். இயற்பெயர்: வெங்கடேசன். தமது இளம் வயதில் சன் பெங் ரோடு யாழ்பாணத்தார் கம்பன் ஒன்றில் இவர் வசித்து வந்தார். அப்பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்குப் பணியாற்ற வந்த குருக்களின் துணையோடும், தமிழ் நாட்டிலிருந்து வந்த கணக்காயர் ஒருவரிடமும் தமிழ் மொழியினைக் கற்றார். ஆங்கில இலக்கியங்களையும் ஆவலுடன் கற்றார். 1941 – 1945 ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் ஜப்பானிய மொழியைக் கற்றார்….

  • சுஜாதா

    திருவல்லிக்கேணியில் சீனிவாசராகவன்- கண்ணம்மாள் தம்பதியருக்கு 03.05.1935-இல் பிறந்தார். இயற்பெயர் ரங்கராஜன். இவரைத் தூக்கி வளர்த்தவர் ‘கணிதமேதை’ இராமானுஜம் துணைவியார். ஸ்ரீரங்கத்தில், அம்மாவைப் பெற்ற பாட்டியின் வீட்டில் கொஞ்ச காலமும், நிரந்தரமாக அப்பாவைப் பெற்ற பாட்டியின் வீட்டிலும் வளர்ந்தார். திருச்சி புனிதவளனார் கல்லூரியில் இயற்பியலில் ‘இளம் அறிவியல்’ பட்டம் பெற்றார். இவரது வகுப்புத்தோழர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.-யில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கேயும் கல்லூரித் தோழரானார் கலாம். சுஜாதா படித்தது ‘மின்னணுவியல்’…

  • ஆ.மாதவன்

    திருவனந்தபுரம் ஆவுடை நாயகம் – செல்லம்மாள் தம்பதியருக்கு 1934இல் பிறந்தார். 1966-இல் கொட்டாரம் சூரியகுமாரியுடன் திருமணம். இவர்களுக்கு கலைச்செல்வி, மலர்செல்வி, கோவிந்தராஜன் என மூன்று பிள்ளைகள். கேரளத்தில் மலையாள மொழியிலேயே தொடக்கக் கல்வியைப் பயின்றார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை மட்டுமே கற்றார். அண்ணன் தொடங்கிய கடையில் உதவி செய்தார். பின்னர் ஒரு பாத்திரக் கடை வைத்தார். தமிழ், மலையாள இலக்கியங்களை ஒருசேரப் படித்தார். அதன் விளைவாக, மலையாளத்தில் வெளிவந்த விக்டர் ஹியூகோவின் ‘கழுமரம்’ கதையை…

  • க.வெள்ளிமலை

    கோவை இருகூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: தெய் வானை அம்மாள் – கவுண்டத்தேவர். இவரது தந்தை சீட்டு நடத்துவதில் வல்லவராக இருந்தார். ஜின்னிங் பேக்டரியில் பங்குதாரராகவும் இருந்துள்ளார். வெள்ளிமலை 5-ஆம் வகுப்பு வரை இருகூர் தொடக்கப் பள்ளியிலும், சர்வ ஜனம் உயர் 1962 முதல் 1991 வரை 30 ஆண்டுகள் பி.எஸ். ஜி.யில் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின் 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் தேர்வு கட்டுப் பாட்டு ஆணையராகப் பணியாற்றினார். தா.ஏ.ஞானமூர்த்தியின் விருப்பத்திற்கேற்ப…

  • மலையமானார்

    திருவண்ணாமலையில் ஆசிரியர் இரா.நாராயணன் – பால குசாம்பாள் இணையருக்கு 15.07.1932 அன்று பிறந்தார். இயற்பெயர் நா.இராசகோபாலன். திருப்பதியிலுள்ள திருவேங்கடன் கீழ்த்திசைக் கல்லூரியிலும், பின்னர் கரந்தை தமிழ்க் கல்லூரியிலும் பயின்று புலவர் பட்டம் பெற்றார். கரந்தை தமிழ்க் கல்லூரியில் பயின்ற போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் ஒரு நாள் முழுவதும் இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். இளங்கலை (பி.ஏ.), இளம் இலக்கியம் (பி.லிட்.), முதுகலை (எம்.ஏ.) ஆகிய பட்டங்களைப் பெற்றார். தனிப் பட, பேராசிரியர் இளவரசர் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்….

  • அ.மறைமலையான்

    தஞ்சை ஒரத்த நாடு கண்ணன் நன்குடியில் க.து.அய்யாசாமி மண்கொண்டார் – முத்தம்பாள் தம்பதியருக்கு 08.07.1932 அன்று பிறந்தார். ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பினை படித்தார். சரபோஜி மன்னர் மாலைக் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பயின்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று மாநில அரசின் வருவாய்த் துறையில் எழுத்தர் பணியில் 1952-இல் சேர்ந்தார். 1953-இல் அஞ்சல் துறையில் எழுத்தர் ஆனார். வள்ளலாரின் அருட் பாவும், டால்ஸ்டாயின் என்னும் கதையும் தன்னை எழுதத்…

  • கு.சிவமணி

    தஞ்சாவூர், கரந்தையில், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்வி நிலையத் தலைமையாசிரியர் குப்புசாமி – பருவதத்தம்மையார் இணையர்க்கு 01.08.1932-இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை கரந்தை, அம்மாப்பேட்டை, பாபநாசம், ஈரோடு, தஞ்சாவூர், விருத்தா சலம், நன்னிலம் பள்ளிகளில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடை நிலை வகுப்பைப் பயின்றார். மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை வந்தும் சேராமல், பி.ஏ. ஆனர்ஸ் சேர்ந்து 1955-இல் பட்டம் பெற்றார். 11.09.1955 அன்று தம் அத்தை மகள் தங்கத்தம்மையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். இவர்களுக்கு மணிமேகலை, தமிழ்ச்செல்வி,…

  • நா.எத்திராஜ்

    நாகை மயிலாடுதுறையில் வே.நாயினா நாயுடு – தனலட்சுமி தம்பதியருக்கு 10.02.1927அன்று பிறந்தார். தந்தையார் இரயில்வேயில் சிறப்புநிலை ஓட்டுநராகப் பணியாற்றியவர். நா.எத்திராஜ் தமது பள்ளிக் கல்வியை விழுப்புரம, மயிலாடு துறை பள்ளிகளில் முடித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இண்டர் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1949-இல்தஞ்சையில் பொதுப் பணித் துறையில் இளநிலை எழுத்தர் பணியில் சேர்ந்து, 1985-இல் நிறைவு பெற்றார். இவரது திருமணம் 06.04. 1954-இல் நடைபெற்றது. துணைவியார் அம்சவள்ளி. இத்தம்பதியருக்கு ‘மல்லிகா’ என்றொரு மகள்; ‘நைனாராஜ்’ என்றொரு…