| Profession | எழுத்தாளர் |
|---|
திண்டிவனம் அரிராமன் -ஆண்டாள் தம்பதியருக்கு 12.3.1934 அன்று பிறந்தார். இயற்பெயர்:
அரி.நாமதேவன்.
திண்டிவனம் குஷால் சந்த் உயர் தொடக்கப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார். திண்டிவனம்
துணை ஆட்சியரும் தமிழ் அறிஞருமான பாஸ்கரத் தொண்டைமான் வழங்கிய பரிந்துரையினால்
மயிலம்ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1948 வரை பயின்று, சென்னைப்
பல்கலைக் கழகத்தின் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர்
கல்லூரியில் 1956 முதல் 1957 வரை தமிழ்ப் புலவர் சான்றிதழ் பெற்றார். 1992-இல் எஸ்.
எஸ்.எல்.சி. யில் முதல் வகுப்பில் தேர்ந்தார். 1953-இல், தாம் பயின்ற குஷால் சந்த் தொடக்கப்
பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார்.
1956-இல் புதுச்சேரி கோவிந்தம்மாளை மயிலம் சிவ.முத்து தலைமையில் மணந்து கொண்டார்.
ஐந்து மகள்கள், ஒரு மகன்.
தமிழ் மீது பற்றுகொண்ட இவர் பள்ளியில் மாணவர்களிடம் திருக்குறளை வாங்கச் சொன்ன தற்காகவும்,
‘வணக்கம்’ என்று தமிழில் சொல்லச் சொன்னதற்காகவும் அப்பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார்.
அதன்பின் தாரமங்கலம், திண்டிவனம், புதுவை பாகூர், அரியங்குப்பம், இலாசுப் பேட்டை ஆகிய
ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி, வம்பாகீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில்
பணியாற்றும்போது பணி நிறைவு பெற்று, 10.05.1991 முதல் 10 தினங்கள் புதுச்சேரி
கலவைக் கல்லூரி பிரெஞ்ச் பிரிவில் ‘பள்ளித் துணைவர் நிலை 1’ ஆகப் பணி புரிந்தார்.
18.06.1991-இல் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியயாற்றினார். இறுதியாக, 1992-இல்
வீரர்வெளி, அரசு மகளிர் நிலைநிலைப் பள்ளி யில் 2-ஆம் நிலை தலைமை ஆசிரியராகப்
பொறுப்பேற்று, சற்றேறக் குறைய 34 ஆண்டுகள் தமிழுக்காகவும், தமிழ் மாணவர் களுக்காகவும்
தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தென்னகனார் 31.03.1994-இல் பணி நிறைவு பெற்றார்.
பாகூரில் உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் அரிசன சமூகத்தவர்கள் வருவது பாவமாகக்
கருதப்பட்ட காலத்தில் இவர் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்து மாணவர்களை தன்
இல்லத்திற்கு வரவழைத்து, அதனால் ஊர் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளானார். தி.லோகநாதன்
எனும் வாய் பேசமுடியாத தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு ‘ஊமைத்துரை’ எனப் பெயர் சூட்டி தன்
குடும்ப உறுப்பினராக்கிக் கொண்டார்.
இவர், சிறுவர் இலக்கியம் – 60, கதைத் தொகு திகள்-18, ஹைகூ தொகுதிகள்-3, காப்பியங்கள்
-6, தமிழ்ப்பெயர்கள்-7,மரபுக்கவிதைத் தொகு திகள்- 35,புதுக்கவிதைதொகுதிகள்- 21, அகரா
திகள்-2, இசைப்பாடல் தொகுதிகள்-2, உரைகள் -16,தொகுப்புகள்-3, கட்டுரைகள்-4,
புதினங்கள் – 8, நாடகம்- 2 ஆகிய படைப்புகளை தமிழ்ச் சமூகத் திற்கு அளித்துள்ளார்.
இவர் 12.9.2017- இல் புதுச்சேரியில் காலமானார்.