எழுத்தாளர்

  • கோவி.மணிசேகரன்

    வேலூர் கோவிந்தன் – பட்டம்மாள் தம்பதியருக்கு 02.05.1927 அன்று பிறந்தார். சிந்தாதிரிப்பேட்டை நகராண்மைக் கழகப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். பிறகு சகோதரியுடன் புதுச்சேரியிலுள்ள பாக்கஉடையான் பட்டு கிராமத்திற்குச் சென்று அங்கே தமிழ் பயின்றார். இசையில் நாட்டங்கொண்டு 1947-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்றார். இசைமாமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் குருகுலவாசம் இருந்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். மகாவித்வான் வெள்ளை வாரணர், அ.சிதம்பரநாதன் செட்டியார் போன்றோரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். ‘கலை மன்றம்’, ‘கலை…

  • மன்னர்மன்னன்

    புதுச்சேரியில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – பழநியம்மாள் தம்பதியருக்கு 3.11. 1928 அன்று பிறந்தார். இயற்பெயர் கோபதி. பிரெஞ்சில் இளங்கலைப் பட்டம் பெற்றார். துணைவி: சாவித்திரி, மைந்தர்கள்: செல்வம், தென்னவன், பாரதி. மகள்: அமுதவல்லி. மாணவப் பருவத்தில் ‘முரசு’ எனும் கையெழுத்து ஏட்டை வெளியிட்டார். இதை அக்கால பிரஞ்சு ஆட்சி குற்றம் என்று வழக்குத் தொடுத்து தண்டித்தது. 1947-இல் அயலவர் ஆட்சி அகல வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் பங்கேற்றமைக்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தம் தந்தையாரின் ‘குயில்’ இலக்கிய…

  • தொ.மு.சி.ரகுநாதன்

    திருநெல்வேலி சிதம்பர தொண்டைமான் – முத்தம்மா தம்பதியர்க்கு 20.10.1923 அன்று பிறந்தார். 1936-ல் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இவரது தந்தை காலமானார். 1939-ல் நெல்லை இந்துக் கல்லூரியில் இன்டர் மீடியட் வரை படித்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடு பட்டு சில மாதங்கள் தலை மறைவு வாழ்¢க்கையும், சிறை வாசமும் அனுபவிக்க நேர்ந்ததால், கல்லூரிக் கல்வி தடை பட்டது. 1944-இல் ‘தினமணி’யில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு ‘சக்தி’, ‘சாந்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியராக அடுத்தடுத்து…

  • பாவலரேறு ச.பாலசுந்தரம்

    தஞ்சாவூரின் வட திசையிலுள்ள கருந்திட்டைக்குடியில் மு.சந்திரசேகரன் பிள்ளை -விஜயம்மாள் தம்பதியருக்கு 18.01.1924 அன்று பிறந்தார். சட்டைநாத வாத்தியார் நடத்திய திண்ணைப் பள்ளி யில் கல்வி பயிலத் தொடங்கி னார். தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது உரிய நேரத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் பள்ளிப் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இடைப் பட்ட காலத்தில் தந்தையுடன் கருங்கல் சிற்ப வேலையைக் கற்றுக் கொண்டிருந்தார். ஒரு சமயம்,…

  • பி.எல்.சாமி

    பி.எல்.சாமி, கோவையில் தூயமைக்கேல் பள்ளி வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய பெரிய நாயகத்தின் மகனாக 10.02.1925-இல் பிறந்தார். இயற் பெயர்: லூர்துசாமி. கடலூர், மஞ்சக்குப்பம் தூய வளனார் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். திருச்சி தூய வளனார் கல்லூரியில் தாவரவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் ஆசிரியராகவும், பின்னர் அஞ்சல் துறையிலும் பணிபுரிந்தார். இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்று புதுவை அரசில் கல்வி அதிகாரியாகவும், வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியாற்றி னார். பி.எல்.சாமி தொடக்கத்தில்…

  • இராஜம் கிருஷ்ணன்

    திருச்சி முசிறியில் வசித்த யக்ஞ நாராயணன் – மீனாட்சி அம்மாள் தம்பதியருக்கு 5.11.1925 அன்று இராஜம் பிறந்தார். தந்தையார் உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர். எனினும் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. இராஜம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தனது 15-ஆவது வயதில் (1940-இல்) முத்து கிருஷ்ணன் என்ற பொறிஞரை மணந்து இராஜம் கிருஷ்ணன் ஆனார். சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்த இவர், 1946-இல் ஆங்கிலத்தில் ‘போனஸ்’ என்றொரு சிறுகதையை ‘மித்ரா’ என்ற புனைபெயரில்…

  • அகிலன்

    புதுக்கோட்டை பெருங்காளூரில் வைத்தியலிங்கம் – அமிர்தம் தம்பதியருக்கு 27.06.1922 அன்று பிறந்தார். இயற்பெயர் அகிலாண்டம். 16-வது வயதில் (1938) இவரது ‘அவன் ஏழை’ எனும் முதல் சிறுகதை பள்ளி இதழில் வெளி வந்தது. பள்ளிப் பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். இதனால் மேற் கல்வியை உதறினார். 1940-களில் வெளிவந்த பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். தனி மனிதஉணர்வுச் சிக்கல்களையும், சமூகப் பிரச்சனைகளையும் சிறு கதைகளாகவும் குறுநாவல் களாகவும் எழுதினார். 1944-இல் தட்டம்மாள் என்பவரைத் திருமணம் செய்து…

  • ஆ.வெ.ர.கிருஷ்ணசாமி

    இலங்கை, நனோபா நகரில் ரெங்கசாமி ரெட்டியார் -சுப்பம்மாள் தம்பதியருக்கு 15.07.1918 அன்று கிருஷ்ணசாமி பிறந்தார். தந்தை 1920-இல் காலமானார். தாய் தனது மூன்று குழந்தைகளுடன் 1923-இல் திருச்சி மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரத்தில் தன் தாய் வழிப் பாட்டியுடன் வசிக்கத் தொடங்கினார். முசிறி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ‘கிராமஊழியன்’ பத்திரிகையை நடத்திய பூர்ணம் பிள்ளை யிடத்தே நட்பு ஏற்பட்டது. 12-ஆவது வயதிலேயே கவி பாடும் திறன் பெற்றார். 1935-இல் கிருஷ்ணம்மாளை இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர் 1939-இல்…

  • க.நா.சுப்ரமணியம்

    தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமானில் 31.01.1921-இல் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்தார். தபால் அதிகாரியாகப் பல இடங்களில் பணியாற்றிய தந்தை கந்தாடை நாராயண சுவாமியுடன் வசித்தார். க.நா.சு.வின் தந்தையாருக்கு ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் இருந்தமையால் தன் மகனிடம் இரவு வேளையில் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஹார்டி ஆகியோரது நூல்களை உரக்கப் படிக்கச் சொல்லிக் கேட்கும் வழக்கம் இருந்தது. அதுவே க.நா.சு.வுக்கு ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பத்திலேயே ஈடுபாடு ஏற்பட காரண மாயிற்று. திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைப் பயின்று,…

  • சோமலெ

    இராமநாதபுரம் மாவட்டம், நெற்குப்பையில் வசித்த பொ. சோமசுந்தரம் செட்டியார் -நாச்சம்மை தம்பதியருக்கு 11.02.1921 அன்று பிறந்தார். 1941-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, 1947-இல் மும்பை ஹாரிமன் இதழியல் கல்லூரியில் பத்திரிகைத் துறையில் நிறைசான்றிதழ் பெற்றார். 16-வது வயதில் ஆ. தெக்கூரைச் சேர்ந்த நாச்சம்மையை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். சோமலெ ஏற்றுமதி இறக்கு மதி வணிகத்தில் ஈடுபட்டார். அதற்காக 1948-49இல் ஆறு மாத காலங்கள் பிரிட்டன், சுவீடன், ஜெர்மனி, செக்கோஸ்…