சோமலெ

சோமலெ

Profession எழுத்தாளர்

Biography

இராமநாதபுரம் மாவட்டம், நெற்குப்பையில் வசித்த பொ. சோமசுந்தரம் செட்டியார் -நாச்சம்மை
தம்பதியருக்கு 11.02.1921 அன்று பிறந்தார்.

1941-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, 1947-இல் மும்பை ஹாரிமன்
இதழியல் கல்லூரியில் பத்திரிகைத் துறையில் நிறைசான்றிதழ் பெற்றார்.

16-வது வயதில் ஆ. தெக்கூரைச் சேர்ந்த நாச்சம்மையை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகள்கள்,
ஒரு மகன்.

சோமலெ ஏற்றுமதி இறக்கு மதி வணிகத்தில் ஈடுபட்டார். அதற்காக 1948-49இல் ஆறு மாத
காலங்கள் பிரிட்டன், சுவீடன், ஜெர்மனி, செக்கோஸ் வோவேகியா, பிரான்ஸ், அயர் லாந்து,
அமெரிக்கா, ஹவாய்த் தீவுகள், ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் பயணித்தார்.

தொடக்க காலத்தில் இலக்குமணச் செட்டியார் என்னும் பெயரில் சில கட்டுரைகளையும், சில
நூல்களையும் எழுதினார். பின்னர் ‘சோமலெ’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். அதுவே
நிலைத்தது.

1955-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகத் தனது பணியைத்
தொடங்கினார். 1958-இல் அண்ணா மலைத் தொழில்நுட்பக் கல்லூரியில் தாளாளராக இருந்தார்.

1955-1961 இல் சென்னைப் பல்கலைக் கழகத்திலும், 1965- 1971 இல் மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்திலும் ஆட்சிப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இக்கால கட்டத்தில்
ஆங்கிலச் சொற்களை விடுத்து தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வழிவகை செய்தார்.

சோமலெ, பயண இலக்கியத்தைத் தமிழ் கூரும் நல்லுலகிற்குத் தந்தார். அவ்வகையில் 10 பயண
நூல்கள், உலக நாடுகள் பற்றிய 10 நூல்கள், ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய 12 நூல்கள், தமிழக
மாவட்டங்கள் பற்றிய 10 நூல்கள், 2 வாழ்க்கை வரலாறு, 1 நாட்டுப் புறவியல், 1 இதழியல்,
மொழி ஆராய்ச்சி 3, அரசியல் 1, பல்கலைக் கழக வரலாறு 1, கட்டுரைகள் 2, சிறுவர்
இலக்கியம் 1, சமயம் 1, குடமுழுக்கு விழா மலர் 10, வெள்ளிவிழா மலர் 1, பொன் விழா மலர்
3, நூற்றாண்டு விழா மலர் 1, மாணவர் சங்க மலர் 1 இவற்றுடன் 6 ஆங்கில நூல்களையும்
தமிழுலகிற்குத் தந்தார்.

சோமலெவின் நூல்களில் அவரது பரந்த நூலறிவும், நுட்பமான ஆய்வு மனப்பான்மையும்,
அறிவுத்திறனும், கடின உழைப்பும், ஆழ்ந்த புலமையும் காணலாம். எளிய, இனிய, தூய
தமிழ்நடையை கையாண்டார். 1986-இல் சோமலெ காலமானார்.