தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதஐயர்
கும்பகோணம் அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் வேங்கட சுப்பையர் மகனாக 19.02.1855 அன்று பிறந்தார். இயற்பெயர் வேங்கடராம சர்மன். இளம் பருவத்தில் பாட்டனாரிடம் இவர் அரிச் சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களைக் கற்றார். காருகுடி கஸ்தூரி ஐயங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை, செங்கணம் விருத்தாசல ரெட்டியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவர்கள் அளித்த பயிற்சியினால் இளம் வயதி லேயே செய்யுள் இயற்றும் சிறப்பினைப் பெற்றார். 1880-இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பணி நிறைவு பெற்ற தியாகராச செட்டியார்…
