Kanmani Rajamohamed

கண்மணி ராஜாமுகமது

Profession எழுத்தாளர், ஊடகவியலாளர்

Biography

பி.ராஜாமுகமது மதுரை மாவட்டம்,
மேலூர் தாலுகா,
கம்பூர் கிராமத்தில் முகமது சுல்தான்,பாத்துமுத்து தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர். மதுரை தீந்தமிழ் தியாகராசர் கலைக்கல்லூரியில் இளம் அறிவியல்- விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.முதன் முதலாக அக்கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்றவர்.அப்துல் ரகுமான்,அப்துல் காதர்,மு.மேத்தா,அபி,
மீரா,இன்குலாப் ஆகியோர் பயின்ற தமிழ்த்துறை தான் இவருக்கு கவிஞர் பட்டம் சூட்டியது.
திரைப்படத்துறையில் கதை வசனகர்த்தா, இயக்குநர்.கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக பணியாற்றுபவர்.

துணை-இணை இயக்குநராக பணியாற்றிய படங்கள் : என்னைவிட்டுப் போகாதே,ராசாவே உன்னை நம்பி,
பொங்கி வரும் காவேரி,
கவிதை பாடும் அலைகள்,என் ராசாவின் மனசிலே,
ஆத்தா உன் கோவிலிலே,சோலையம்மா உள்ளிட்ட திரைப்படங்களில்
துணை இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மகாபாரத் (கன்னடம்),சந்திர சக்கோரி (கன்னடம்) திரைப்படத்திற்கு கதாசிரியராகவும்
கொடைக்கானல்,
நில் கவனி என்னைக் காதலி,நீ நான் நிழல்,
உதிரப் பூக்கள்,காதல் கதை சொல்ல வா,
கடற்கரைக்கு கடைசி ரயில் திரைப்படங்களுக்கு
வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.மௌன ஊஞ்சல் எனும் தொலைக்காட்சி தொடரை சன் தொலைக்காட்சிக்காக எழுதி இயக்கியுள்ளார். காகிதத்தில் காதல் செய்து,மலர்க்கிரீடம், பால்ய கால சொர்க்கவெளி, கண்மணி ராஜாமுகமது கவிதைகள்,மனசுக்குள் ஒளித்து வைத்த மயிலிறகு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை,பாதாள கரண்டி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார்.
கவிஞர்,எழுத்தாளர்,திரைப்பட கதை வசனகர்த்தா,கண்மணி ராஜாமுகமது திருச்சியில் வசித்து வருகிறார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகவும், தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்க மூத்த உறுப்பினராகவும்,மறைந்த இயக்குநர்,நடிகர் கே.பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினராக நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.
கொச்சி தமிழ்ச்சங்கம், திருவனந்தபுரம் பூஜப்புரா தமிழ்ச்சங்கம் ஆகியவையால் விருதளித்து பாராட்டப்பெற்றவர்.இலக்கியச் சுடர் விருது,தமிழ்ச்சுடர் விருது,இளம் பாடலாசிரியர் விருது,உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.தமிழக அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்றுள்ளார்.
இலக்கிய,படப்பிடிப்பு நிகழ்வுகளுக்காக இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,ஜெர்மனி,
டென்மார்க், தாய்லாந்து
என பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.