விந்தன்
காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் வேதாசலம் – ஜானகியம்மாள் தம்பதியருக்கு 22.09.1916 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் கோவிந்தன். வறுமையான குடும்பச் சூழலினால் நடுநிலைப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல், இலவச இரவுப் பள்ளிக்குச் சென்று ஓரளவு கல்வியறிவு பெற்றார். பின்னர், ஓவியம் படிப்பதற்காக சென்னை ஓவியக் கல்லூரிக்குச் சென்றார். பாதியிலேயே ‘ஜெமினி ஸ்டுடியோ’வில் ஓவியரானார். ‘தமிழரசு’, ‘ஆனந்தபோதினி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய அச்ச கங்களில் அச்சுக் கோர்ப்பாளராக வேலை செய்தார். ஆனந்த விகடனில் வேலை செய்யும் போதுதான்…
