பேரா.பி.ஸ்ரீ.ஆச்சார்யா

பேரா.பி.ஸ்ரீ.ஆச்சார்யா

Profession எழுத்தாளர்

Biography

திருநெல்வேலி மாவட்டம், தென்திருப்பேரை கிராமம், ‘சித்திரக்கவி’ பிச்சு ஐயங்கார்
-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு 16.4.1886 அன்று பிறந்தார். இயற்பெயர் ஸ்ரீநிவாசன்.

நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். அப்போது
கல்லூரி முதல்வர் விங்ளர் துரைக்கும், ஹெர்பர்ட் சாம்பியன் துரைக்கும் தமிழ் கற்றுக்
கொடுக்கும் ஆசிரியர் ஆனார்.

எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்ததாலும், விடு தலைப் பேராட்டத்தில் கவனம்
திரும்பியதால் இன்டர்மீடியட் படிப்பு பாதியிலேயே நின்றது. என்றாலும், இவரது ஆங்கிலப்
புலமையை வியந்த அவரது புரவியை கொடுத்தார். அதனால் பி.ஸ்ரீ. நெல்லைச் சீமையில்
துரைகளுக்கு ஒப்பாக வெண்புரவியில் உலா வந்தார். மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் அப்பணியைத்
துறந்து, கதராடை அணிந்து தேசியவாதியாக மாறினார்.

பி.ஸ்ரீ.யின் அபரிமிதமான தேசபக்தியை அறிந்த பெற்றோர் அவருடைய கவனத்தைத் திசை
திருப்புவதற்காக தங்கம்மாள் அவர்களை திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதியருக்கு ஒரு
மகன், இரு மகள்கள்.

பக்தி இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பி.ஸ்ரீ. திருக்கோயில்களிலும், தலப்
புராணங்களிலும் ஆழ்ந்த பற்று கொண்டார். கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றில் மிகுந்த
புலமை பெற்றார்.

ஆனந்த விகடன் இதழில் ‘கிளைவ் முதல் இராஜாஜி வரை’ என்ற தொடர்கட்டுரை எழுதி, பின்
நூலாக்கினார். இவரை இலக்கிய நண்பர்கள் ‘ஜாம்பவான் எழுத்தாளர்’ என்று அழைத்தனர்.

10 ஆய்வு நூல்கள், கம்பனைப் பற்றியவை 5, 27 வைணவம், 10 சைவம், 35 சமயம், 8 வரலாறு,
10 ஒப்பீடு, 12 பொது ஆகிய துறை சார்ந்த நூற்களை எழுதியுள்ளார்.

1960 – 1970களில் இவரது கட்டுரைகள் இல்லாமல் எந்தவொரு தீபாவளி மலரும் வராது என்கிற
நிலை இருந்தது.

இவர் எழுதிய ‘ஸ்ரீ இராமானுஜர்’ என்னும் வரலாற்றுப் பெருநூலுக்கு 1964-ஆம் ஆண்டுக் கான
சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது.

‘கம்பமேதை’, ‘இலக்கியச் செம்மல்’, ‘இராம திலகம்’, ‘கம்பச் சக்கரவர்த்தி’, ‘கம்பராமாயணக்
கலங்கரை விளக்கம்’ போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.

சென்னைவாசியான இவர், தன் இறுதிக் காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். உடல்
நலம் குன்றியபோதிலும் ‘நான் ரசித்த கம்பன்’ எனும் இறுதி நூலை படுக்கையில் இருந்தபடியே
எழுதி முடித்து வெளியிட்டார்.