உமாசந்திரன்

உமாசந்திரன்

Profession எழுத்தாளர்

Biography

ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டிணத்தில் பூர்ண கிருபேஸ்வர அய்யர்- உமா பார்வதி
தம்பதியருக்கு 14.09. 1914 அன்று பிறந்தார். இயற் பெயர்: ராமசந்திரன். பூர்ணம்
சோமசுந்தரம், பூர்ணம் விஸ்வ நாதன் ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர், தனது தாய் பெயரின்
முன் பாதியையும், தன் பெயரின் பின் பாதியையும் சேர்த்து ‘உமாசந்திரன்’ என புனைப்பெயர்
வைத்துக் கொண்டார்.

பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. இண்டர் மீடியட் படித்தவர்.

1944-இல் கமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூர்ணிமா, பாரதி என இரு
மகள்கள், நட்ராஜ் (முன்னாள் டி.ஜி.பி., முன்னாள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர்), கிஷோர் என
இரு மகன்கள்.

உமாசந்திரன் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் நன்கு புலமைப்
பெற்றவர்.

‘ஆல் இந்தியா ரேடியோ’வில் தில்லி, திருச்சி, சென்னை ஆகிய ஊர்களில் முப்பது ஆண்டு
களுக்கும் மேலாகப் பணியாறினார். பணி நிறைவின் போது இவரது பணியைச் சிறப்பிக்கும்
வகையில் நான்கு ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கினர்.

‘நேஷனல் புரோகிராம் ஆஃப் டிராமா’ என்ற நிகழ்ச்சி மூலம் இவரது நாடகங்கள் டில்லி அகில
இந்திய வானொலியில் புகழ்பெற்றன. 1975-இல் இவர் எழுதிய ‘புகையும் பொறியும்’ என்ற
வானொலித் தொடர் நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தொடர் 1985-இல் நூலாகவும்
வெளியானது.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் இருவரின் மறைவின் போதும் இறுதி ஊர்வலத்திற்கான
நேர்முக வர்ணனையை வானொலி மூலம் நிகழ்த்தினார்.

பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களும், நூற் றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்
ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்றோர் களின் திரைப்படங்களுக்கு கதை வசனம்
எழுதினார். இவர் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் கல்கியின் வெள்ளி விழாப் பரிசாக
பத்தாயிரம் ரூபாய் பெற்றது. அத்துடன் கல்கி இதழில் எட்டு மாதங்கள் தொடராக வெளியானது.
இயக்குநர் மகேந்திரன் மூலமாக திரைப்படமாக உருவானது. இத்திரைப்படம் இந்தியிலும்
வெளியானது. இவரது கதைகள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘சரிதா’ என்ற இந்தி வார
இதழில் வெளியானது.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில் மகன் நட்ராஜுடன் கலந்துகொண்டார்.
பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொண்டிருந்த உமாசந்திரன் சடங்கு சம்பிரதாயங்களில்
நம்பிக்கையில்லாதவராக இருந்தார். சிறந்த சீர்திருத்தவாதியாக வாழ்ந்து காட்டினார்.
குடும்பத்தினரின் சடங்கு சம்பிரதா யங்களைத் தடுக்க மாட்டார். மற்றவர்களின் நம்பிக்கையை
மதிக்கும் பண்பு கொண்டவர்.

11.04.1994 இரவு உறங்கச் சென்றவர் மீளாத் துயிலில் ஆழ்ந்தார்.