| Profession | எழுத்தாளர் |
|---|
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நாராயணன் -திருவேங்கடம் தம்பதியருக்கு
07.12.1917-இல் இவருடைய தந்தை கிராம முன்சிப்.
உயர்நிலைப் பள்ளி வரை யிலான கல்வியை நாங்குநேரியில் பயின்றார். திருநெல்வேலி இந்து
கல்லூரியில் புகுமுக படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி யில்இளங்கலைப் படிப்பையும்
முடித்தார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் (எல்.டி) பட்டம்
பெற்றார். பின்னாளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
கல்லூரிக் கல்வி காலத்தில் டால்ஸ்டாய், டிக்கன்ஸ், பிட்மன், ஹியூகோ போன்ற உலக இலக் கிய
அறிஞர்களின் நூல்களை ஆழ்ந்து பயின்றார்.
1942 தொடங்கி மதுராந்தகம், நாங்குனேரி, கோவில்பட்டி, தென்காசி ஆகிய ஊர்களில்
ஆசிரியராகப் பணியாற்றினார். பொதுவுடைமை இயக்க ஈடுபாட்டினாலும், இலக்கிய
ஆர்வத்தினாலும் சமரசமற்ற மனப்பாங்கினாலும் ஆசிரியர் பணியிலிருந்து 1947-இல் விலகினார்.
1948-இல் ஒரு நண்பருடன் இணைந்து ‘ஸ்டூண்ட் டுடோரியல் இன்ஸ்டி ட்யூட்’ தொடங்கினார். பிறகு
‘வானமாமலை ட்யூசன் சென்டர்’-ஐத் தொடங்கினார்.
சிறு வயதிலேயே முறைப் பெண்ணான சீதையம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. அவர்
நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிடவே, பத்மாவதியை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு
மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.
சமூகவியல், மானுடவியல், வரலாறு, இலக்கியம், அறிவியல், தத்துவம், சார்ந்த 100க்கும்
மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அவர் ஆற்றியுள்ள பணி மிக முக்கிமானது. நாட்டுப்புறத்
தெய்வங்கள், பாடல்கள், விழாக்கள், தாலாட்டு, விளையாட்டு, காதல், திருமணம், குடும்பம்,
உழவுத்தொழில், ஒப்பாரி ஆகியன குறித்த தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து நூல்களாக
ஆவணப்படுத்தியுள்ளார்.
1969-இல் ‘ஆராய்ச்சி’ என்றொரு இதழைத் தொடங்கினார். அவ்விதழில் பல்துறை அறிஞர்களின்
ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். கடும் பொருளாதார நெருக்கடியிலும் தம் இறுதி
காலம்வரை அவ்விதழை தொடர்ந்து நடத்தினார்.
‘ரப்பரின் கதை’ எனும் குழந்தை நூலுக்காக மத்திய அரசின் நேரு பரிசும், ‘தமிழ் வளர்ச்சிக்
கழகப் பரிசையும், ‘மார்க்சிய சமூக இயல் கொள்கை’ நூலுக்காக சோவியத் நாடு பரிசையும்
பெற்றார்.
நா.வா. அவர்கள் 1980-இல் மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்
கழகம் இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘கலாநிதி’ (டி.லிட்) பட்டம் வழங்கி
சிறப்பித்தது.
இவரது 22 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி, அவரது வாரிசுகளுக்கு ஐந்து இலட்சம்
ரூபாய் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.