| Profession | எழுத்தாளர் |
|---|
டி.கே.சி. 18.08.1881-இல் பிறந்தார். தந்தை தீத்தாரப்ப முதலியார், தாயார் மீனம்மாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாய்வழிப் பாட்டனார் வீட்டில் பிறந்தார். தென்காசியில் வசதியாக குடும்பம்.
திண்ணைப் பள்ளி, தென் காசி நடுநிலைப் பள்ளி, திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளி
ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1900-08இல் சென் னை கிறிஸ்தவக் கல்லூரியில்
கல்லூரிப் படிப்பை முடித்தார். 1908-இல் தாய்மாமன் புதல்வி ‘பிச்சம்மாள் அண்ணி’யை
வாழ்க்கைத் துணையாக ஏற் றார். 1908-இல் சென்னையில் ஒரு வாடகை வீட்டில், மனை வியுடன்
இல்லறம் நடத்திக் கொண்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1909-இல் ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. தேர்வில் தோல்வியடைந்தார். மீண்டும் தென்காசிக்குத் திரும்பி, திருவனந்தபுரம்
சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். வழக்கறிஞர் பணியாற்றினார்.
திருநெல்வேலியில் இரண்டு வீடுகளை விலைக்கு வாங்கினார். அங்கேயே குடியேறினார்.
டி.கே.சி.க்கு மலேரியா காய்ச்சல் அடிக்கடி வந்தது. வழக்கறிஞர் சுப்பையா முதலியார் கம்ப
ராமாயணம் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ஒவ்வொரு பாடலும் அவரைச் சுண்டி
இழுத்தன. வழக்கறிஞர் தொழிலைக் கை விட்டார்.
1926-இல் தனது 45-ஆம் வயதில் அரசியலில் ஈடுபட்டு 1927-இல் சட்டமன்ற மேலவை
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1930-35இல் இந்து மத அற
நிலையத்துறை ஆணையராகப் பணியாற்றினார். அப்போது ‘மகேஸ்வர பூஜை’ எனும் பெயரால் சமபந்தி
விருந்து நடத்தினார். 1935-இல் தமது இல்லத்தில் ‘வட்டத்தொட்டி’ எனும் இலக்கிய வட்டத்தைத்
தொடங்கினார்.
வட்டமான முற்றத்தில் இலக்கிய நண்பர்கள் அமர்ந்து இலக்கியம், கலை தொடர்பாகப் பேசு வார்கள்.
இந்த அமைப்புதான் டி.கே.சி. இலக் கியத் திறனாய்வுத் துறையில் ஈடுபடக் காரணமாக
இருந்தது. ‘பண்பாடு’ என்ற சொல்லை உருவாக்கினார். இவரை ‘ரசிகமணி’ எனப் பாராட்டினார்
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி.
1941-இல் ‘இதயஒலி’ எனும் கட்டுரைத் தொகுப்பையும், 1943-இல் ‘முத்தொள்ளாயிர’த்தைத்
திறனாய்வுக் குறிப்புகளுடன் வெளியிட்டார். 1952-55இல் ‘கம்பர் தரும் ராமாயணம்’ எனும்
நூலை மூன்று பாகங்களாக வெளியிட்டார்.
தமிழிசை இயக்கம், மற்றும் மறையும் நிலையில் ஒரு சாராருக்கே உரிய நிலையில் இருந்த
பரதக் கலைக்குப் புத்துயிர் அளித்து சிறப்புற வாழச் செய்தார். கம்பராமாயணம் பாடல் களைத்
திருத்தம் செய்து பதிப்பித்தார்.
கடித இலக்கியச் செழுமைக்கு டி.கே.சி.யும் ஒரு காரணம். பாஸ்கரத் தொண்டைமான், மகாராஜன்,
பட்டாபிராம், ராஜேஸ்வரி போன் றோருக்கு டி.கே.சி. எழுதிய கடிதங்கள் தனித் தனி
நூல்களாக வெளிவந்துள்ளன.
23.08.1981 அன்று டி.கே.சி.யின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு குற்றாலத்தில்
கொண்டாடியது.