வடுவூர் கே.துரைசாமிஐயங்கார்

வடுவூர் கே.துரைசாமிஐயங்கார்

Profession எழுத்தாளர்

Biography

துரைசாமி ஐயங்கார், தஞ்சை மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வடுவூர் கிராமத்தில்
12.12.1880அன்று பிறந்தார். தந்தையார் கிருஷ்ண ஐயங்கார்.

1891-இல் திருமணம் நடைபெற்றது. மனைவி நாமகிரி அம்மாள். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு
மகள்.

வடுவூராரின் புகைப் படம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், “சேலம் பட்டுக்கரை வேட்டியும்,
காதில் டால் வீசும் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக்கோடு மாகவும் நான்
பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என் னால் இன்று கூட நினைவு கூர முடிகிறது” என
க.நா.சு. இவரைக் குறித்து குறிப்பிடு கிறார்.

திருமணத்திற்குப் பிறகு மெட்ரிக், பி.ஏ. பட்டத்தினைப் பெற்றார். ஊத்தங்கரை எனும் ஊரில்
வருவாய்த் துறையில் கண்காணிப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது தாம் கண்ட
வரு வாய்த்துறை அதிகாரிகள், நீதித் துறையினர், காவல் துறையினர் ஆகியோரை தம் படைப்பு
களில்பாத்திரங்களாகப் படைத் துள்ளார்.

பின்னர், சென்னை அஞ்சல் அலுவலகத் தணிக்கைத் துறை யில் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
1918-36 காலகட்டத்தில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கதைகள் எழுதிப் பெரும்
புகழும், செல்வமும் சேர்த்தார்.

1938-இல் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை யில் ‘வடுவூர் இல்லம்’ என்ற பெரியதொரு
மாளிகையைக் கட்டி வாழ்ந்தார். தம் ஒரே மகளுக்கு மிக ஆடம்பரமாக திருமணம் செய்து
வைத்தார். இவர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை 41 என எழுத்தாளர் சிட்டியும், 47 என
வாழ்வியற் களஞ்சியமும் குறிப்பிடுகிறது. ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைத்த தரவுகளின்
வழி வடூவூராரின் நாவல்கள் 38, குறுநாவல்கள் 12 என 50 நூல்கள்.

1919-இல் தொடங்கி ‘மனோரஞ்சிதம்’ எனும் மாத இதழை நடத்தியுள்ளார்.

ஏறத்தாழ 900 பக்கங்கள் எனும் அளவில் ‘மறைந்த இணைப்புகள்’ எனப்படும் (1931) என்றொரு நூலை
எழுதியுள்ளார். ‘எகிப்திய பாரோக்கள் தமிழ கத்திலிருந்து சென்ற அய்யங்கார்கள்தாம்’ எனத்
துணியும் முயற்சியே இந்நூல்.

இந்நூலை பத்து ரூபாய் விலையில் 10,000 பிரதிகள் அச்சிட்டு தாமே வெளியிட்டதாகவும்,
ஆனால், ஆங்கிலேய அரசு பல்வேறு இன்னல்களை அவருக்கு இழைத்ததால், அதில் ஒரு பிரதிகூட
விற்க முடியாமல் அச்சடித்த பிரதிகளை 500 ரூபாய்க்கு பழைய புத்தகக்காரரிடம் போட்டுவிட்ட
தாகவும் ஒரு குறிப்பு கிடைத்திருக்கிறது.

வடுவூராரின் பிற்கால வாழ்வு வறுமை கொண்டதாகவே இருந்தது. மாளிகை போன்ற தனது இல்லத்தை
மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளார். தம் எழுத்தை ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார்.
மேலும், மலிவு விலையில் மாதம் ஒரு புத்தகம் என எழுதிக் கொடுத்து தமது எழுத்தை
மலிவாக்கிக் கொண்டார். இவரது ‘மைனர் ராஜாமணி’ எனும் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டு
திரையிட்டதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து
நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி, பல்வேறு அவமானத்தால் தாக்குண்டு 06.04.1942 அன்று
காலமானார்.