டி.செல்வராஜ்
திருநெல்வேலி மாவடி கிராமத்தில், டேனியல்-ஞானம் தம்பதியருக்கு 14.1.1938 அன்று பிறந்தார். 1959-இல் திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பையும், 1962-இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து, சென்னையில் மூத்த வழக்கறிஞர் வி. வெங்கட்ராமனிடம் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர், திண்டுக்கல் மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்கறிஞ ராகப் பணியாற்றினார். 1971-இல் இவருக்கு பெரியகுளம் வழிவிட்டான் பாரத புத்ரியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். கல்லூரி நாட்களிலேயே தொ.மு.சி., தி.க.சி.,…
