| Profession | எழுத்தாளர் |
|---|
சிங்கை சிப்புட், கங்கை பூலோ பகுதியில் பூமாலை உடையார் – இராமாயி தம்பதியருக்கு
8.4.1937 அன்று பிறந்தார்.
இவரது பெற்றோர் திருச்சி பகுதியிலிருந்து மலாயா வந்தவர்கள். கடலை வியாபாரம் செய்து
வந்தனர்.
மாணவப் பருவத்திலேயே ‘தமிழ் முரசு’ இதழின் மாணவர் இதழான ‘மாணவர் மணி’யில் சிறுகதை,
கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். திரையரங்கில் வேலை செய்துகொண்டே கல்கண்டு, ஆனந்த விகடன்,
குமுதம், கல்கி போன்ற இதழ்களை வாசித்து, எழுதும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
1956-இல் ‘தமிழ்நேசன்’ இதழில் வெளிவந்த ‘சாந்தி’ சிறுகதையும், ‘தமிழ்முரசு’ இதழில்
வெளியான ‘நினைவின் நிழல்’ சிறுகதையும் இவரை சிறந்த எழுத்தாளராக அடையாளப்படுத்தின.
1960-களில், ஈப்போவிலிருந்து வெளிவந்த ‘இலட்சியம்’ இதழில் ‘சமுதாய வீதி’ என்ற
பகுதியை எழுதினார். அவ்விதழ் நின்ற பிறகு 1978- இல் அதே தலைப்பில் தமிழ் மலரில்
சமுதாயப் பிரச்சனைகளைத் தொடராக எழுதினார். பின்னாளில் இவற்றைத் தொகுத்து ‘சமுதாய
வீதி’ என்ற நூலாக வெளியிட்டார்.
1973- இல் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஒருங்கிணைத்து ‘தமிழ் எழுத்தாளர் சங்க’த்தை
உருவாக்கியவர்களில் முக்கிய மானவர். இச்சங்கத்தின் சார்பாக 1980-களில் நாட்டின் 12 இடங்
களில் நூலகங்கள் அமைக்கப்பட்டன.
இவரை, 1981- இல் ‘மலேசிய எழுத்தாளர் சங்கம்’ சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்து,
1000 ரிங்கிட் ரொக்கமும், கேடயமும் வழங்கிச் சிறப்பித்தது.
மலேசியாவில் வெளிவரும் எல்லா தினசரி களிலும், இதழ்களிலும் எழுதுகிறார்.
1961, 62, 63, 64ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள 16 எழுத்தாளர்களை இணைத்து ‘பாவையின்
பசி’, ‘பெண்மனம்’, திருவிளக்கு, போர்வீரன் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை
வெளியிட்டுள்ளார்.
1985-இல் ‘வரலாற்றில் ஒரு மாமனிதர்’ என்ற துன் சம்பந்தனின் வாழ்க்கை வரலாற்று நூலை
எழுதியுள்ளார்.
சிறந்த எழுத்தாளர் (1982), தொண்டர் மணி(1982), திருஞானசெல்வர் (1993) அருந் தமிழ்
அரசன் (2013) போன்ற பட்டங்களுடன் பல கௌரவிப்புகளையும், பரிசுகளையும்,
பணமுடிப்புகளையும் பெற்றுள்ளார். துன் சம்பந்தன் 90-ஆவது அகவையை முன்னிட்டு நடைபெற்ற
விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
ஆரம்ப காலத்தில் எந்த வேகத்தில் எழுத ஆரம்பித்தாரோ, அதே வேகத்தில் இன்னும் எழுதிக்
கொண்டேயிருக்கிறார்.