ச.மதனகல்யாணி

ச.மதனகல்யாணி

Profession எழுத்தாளர்

Biography

புதுவை முருங்கப்பாக்கம் கி.ராஜாம்பாள் – தளவா கிருஷ்ணசாமி தம்பதியருக்கு 1938-இல்
பிறந்தார். தந்தை காவல் துறை ஆய்வாளர்.

தனது ஆரம்பக் கல்வியை (1949) தந்தையின் பணி மாற்றங்களினால் பல்வேறு ஊர்களில் படித்தார்.
இப்பள்ளிகளில் துணை மொழியாகப் பிரெஞ்சு மொழியை எடுத்துப் படித்தார்.

உயர்நிலைக் கல்வியை ‘செயின் ஜோசப் ஆஃப் குளினி’ யில் பிரெஞ்சுப் பிரிவில் 1949 -55
ஆண்டுகளில் முடித்தார். நான்கு வகுப்புகளை இரண்டே ஆண்டுகளில் முடித்து 1951-இல்
பிரெஞ்சு ‘செர்த்திபிக்கா’ வில் தேர்ச்சி பெற்றார். அடுத்ததாக பிரெஞ்சு பிரவே 1955-இல்
முடித்தார். இதற்கு அடுத்து பிரெஞ்சுக் கல்லூரி யில் இளங்கலை பக்காலோ ரேயா பயிலச்
சென்றார்.

இளங்கலை கணிதத்தில் முதலிடம் பெற்றார். இறுதியாண்டு தத்துவப் பாடத்தைப் பாரீஸ் பல்கலைக்
கழகத்தில் 1958-இல் முடித்தார். 1956-இல் இடையில் தமிழ் பிரவேவையும், 1957-இல் சென்னைப்
பல்கலைக் கழகத்தில் மெட்ரி குலேஷனையும், 1973-இல் பிரெஞ்சில் முது கலையைக் கர்நாடகா
தார்வார் பல்கலைக் கழகத்திலும் பிறகு 1974-இல் தமிழில் புலவர் படிப்பைச் சென்னைப் பல்கலைக்
கழகத்திலும் முடித்தார்.

1982-இல் பிரெஞ்சுக் கல்வி அமைச்சகம் நடத்திய போதனாமுறைப் பயிற்சிகளில் பங்கேற்றார்.
1989- இல் கல்வியில் கணினியைக் கையாளுதல் பயிற்சியும், 1991- இல் கல்வியில்
நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் கையாளுதல் பயிற்றியும் 1993-இல் ஒரே வகுப்பில்
பயிலும் மாணவர்களுக்குத் தகுதி வாரியாகக் கற்பிக்கும் முறைகளுக்கான பயிற்சி வகுப்பினை
யும், 1994-இல் ஒளிஒலிப் படங்கள் மூலம் பாடங்களைக் கற்றுத் தருதல் பயிற்சியையும்,
1995-இல் கல்விக்கான சின்னத் திரைப்படங்கள் தயாரிக் கும் பயிற்சியையும், 1996-இல் கணினிப்
பயிற்சியையும் 1997-இல் மாணவர்களுக்கான ‘குடிமகன்’ என்ற உணர்வை எழுப்ப வேண்டியதற்கான
பாடங்களை வழங்கும் பயிற்சியும் பெற்றுள்ளார்.

தந்தையின் திடீர் மறைவினால் எளிதில் கிடைக்கவிருந்த மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை
மாற்றிக் கொண்டு பிரெஞ்சுக் கல்லூரியின் ஆசிரியர் பணியை ஏற்றார். தமிழ்ப் பணியோடு
பிரெஞ்சு மொழி ஆசிரியர் பணி யையும் ஏற்றார்.

புதுச்சேரி அல்லியான்ஸ் பிரான் சேவில் (1979-1990) பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் 1977 முதல் சில காலமும், தார்வார் பல்கலைக் கழகத்தில் (1970 -1988) பிரெஞ்சு
வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் தூறல், ஆராதனை என இரு கவிதை நூல்களைப் படைத்துள்ளார். பிரெஞ்சு அரசிடமிருந்து
‘ஒபிசியே’ (2011), ‘செவாலியே’ (2002), சிறுகதைக்கான விருது (1995), சிறந்த
கவிதைக் கான பரிசு (1997), இலக்கிய விருது (1998) ஆகிய னவும், புதுச்சேரி
அரசிடமிருந்து, ‘கலைமாமணி (2007), ‘விடுதலைப் பொன்விழா மகளிருக்கான விருது’
(2004) உள்பட தமிழகத்தின் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.