எழுத்தாளர்

  • எஸ்.அர்ஷியா

    பிறந்தது மதுரையில். பெற்றோர்: சையத் தாவூத் – ஆபில்பீவி. வணிகத்தையும், இந்த வணிகத்தில் அதிகார அரசியலும் கைகோர்த்துக் கொள்ளும் சூழலையும் பதிவு செய்திருக்கிறார். இவரது முதல் நாவலான ‘ஏழரைப் பங்காளி வகையறா’ உருது பேசும் முஸ்லிம்களின் வாழ்க்கை குறித்த தமிழின் முதல் நாவல் என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்நாவல் 2009-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசையும், கலை இலக்கியப் பெருமன்றத் தின் பரிசையையும் பெற்றது. “ஒரு பேரினக் குழுவின் இன வரையியல் நாவல் என்ற அடையாளமே…

  • எ.ஜோதி

    திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழையூர் எனும் கிராமத்தில் எத்திராஜு – அம்மாபொண்ணு தம்பதியருக்கு 7.7.1950 அன்று குழந்தை எழுத்தாளர் பிறந்தார். தந்தையார் காவல் துறையில் பணியாற்றினார். துணைவியார்:அமுதவள்ளி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்றார். 1973-இல் புதுவை அரசில் பணியைத் தொடங்கினார். 1975-லிருந்து 1977 வரை புதுவை அரசு பயிற்று ஆசிரிய ராகவும், 1978-லிருந்து 2003 வரை தமிழ் விரிவுரையாளராகவும்,…

  • எம்.ஏ.சுசிலா

    சிவகங்கை காரைக்குடி அனந்தராமன் -சோபனா தம்பதியர்க்கு 27.02.1949 அன்று பிறந்தார். 1964-இல் காரைக்குடி மீனாட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கதைகள் எழுதத் தொடங்கி விட்டார். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் 1965-இல் பி.யு.சி.யும், 1968-இல் இளநிலை வேதியியல் பட்டமும், 1970-இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டமும் பெற்று அதே ஆண்டு பாத்திமா கல்லூரியில் தமிழ் விரிவிரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21. இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், மூன்று ஆண்டுகள்…

  • இந்துமதி

    திருவண்ணாமலை வந்தவாசி அருகிலுள்ள ‘மேல்நர்மா’ கிராமத்தில் 1948 பிப்ரவரியில் பிறந்தார். சிறுவயதிலேயே பாட்டிக்கு கதைப் புத்தகங்களைப் படித்துச் சொல்லும் பழக்கம் இருந்தது. சென்னையில் இவர்கள் எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கு அருகில் குடியிருந்தனர். அதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று, அகிலன் கதைககள் எழுத எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், எத்தனங்கள் ஆகியவற்றை அருகிலிருந்து உன்னிப்பாகக் கவனித்தார். 16-வது வயதில் கவிதைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவை ‘கணையாழி’, ‘கசடதபற’, ‘ஞானரதம்’, ‘தீபம்’ போன்ற இதழ்களில் வெளி வந்தன. ‘ஆனந்த…

  • வ.நஞ்சுண்டான்

    நாமக்கல் பரமத்திவேலூர் அனிச்சம் பாளையம் எனும் கிராமத்தில் வருணதேவன்- பழனியம்மாள் தம்பதியருக்கு 15.06.1948 அன்று பிறந்தார். நன்செய் இடையாறு தொடக்கப் பள்ளியில் கல்வியையும், வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியையும் பயின்றார். அவ்வாறு பயிலும்போது, ஆசிரியர்களைப் பார்த்து அவர்களைப் போல தாமும் ஆசிரியராக வேண்டும் எனும் விருப்பம் ஏற்பட்டு, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிப் பெற்றார். கரூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கநல்லி துவக்கப்பள்ளி ஆசிரியராக 1970-இல் பணி யாற்றத் தொடங்கிய இவர், 1972-இல் புன்னம்…

  • செ.சீனி நைனாமுகம்மது

    சிவகங்கை இளையான்குடியைச் சார்ந்த கீழாயூர் என்ற கிராமத்தில் வசித்த செய்யது ஆலம் -இபுராகீம் பீவி தம்பதியருக்கு 11.09.1947 அன்று பிறந்தார். இவரது தந்தை மலேசியா -கோலாலம்பூரில் மளிகைக் கடை நடத்தி வந்தார். தாயார் தமிழ்நாட்டில் இல்லத்தரசியாக தமது எட்டுக் குழந்தைகளையும் வளர்த்து வந்தார். தொடக்கக்கல்வியை சொந்த ஊரில் படித்தவர், 12-ஆம் வயதில் மலாயா சென்று அங்கு சில ஆண்டுகள் படித்து, மீண்டும் தமிழகம் திரும்பி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார். இரண்டாம்…

  • நாஞ்சில்நாடன்

    கன்னியாகுமரி நாகர்கோயில் அருகிலுள்ள வீரநாராயணமங்கலத்தில் விவசாயி கணபதியாப் பிள்ளை – சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு 31.12.1947 அன்று பிறந்தார். இயற்பெயர் க.சுப்பிரமணியன். 1970-இல் எம்.எஸ்சி. (கணிதம்) பட்டம் பெற்றார். 1972-இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் காரணமாக பம்பாய் நகருக்குச் சென்று, தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்து, மும்பை, கோவை அலுவலகங்களில் கிளை மேலாளராகப் பணியாற்றி, 2005-இல் பணி நிறைவு பெற்றார். பம்பாய் வாழ்வின் தனிமை, வெறுமை, வறுமை, சொந்த மண் பற்றிய ஏக்கம், வாழ்க்கைப்…

  • கோ.பெரியண்ணன்

    மயிலம் நல்ஆமூரில் கோவிந்தசாமிக் கவுண்டர்- தனலட்சுமி தம்பதி யருக்குத் 26.3.1947-இல் பிறந்தார். நல்லாமூர், மயிலம் பள்ளிகளில் கல்வியைப் முடித்து, மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார். 1969-இல்சென்னை கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். பிறகு வேடந்தாங்கல் பள்ளியிலும், நங்கைநல்லூர் அரசு உயர் நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார். 1974-இல் இவருக்கும் அம்சவேணி அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெ. மயிலவேலன்,…

  • அ.கா.பெருமாள்

    கன்னியாகுமரி பறக்கை கிராமத்தில், அழகம்பெருமாள் – பகவதியம்மா தம்பதியருக்கு 1947-இல்பிறந்தார். இயற்பெயர்: காக்கும்பெருமாள். (தந்தையார் மலையாள ஆசிரியராக பணியாற்றி, பின்னர் நீதிமன்றத்தில் மலையாள ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியைச் செய்தார்). நாகர்கோவில் இந்து கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பி.ஏ. பட்டமும், கேரளா, பாலக்காடு சித்தர் கல்லூரியில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். சித்தர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த (எழுத்தாளர் ஹெப்சிபாவின் கணவர்) ஜேசுதாஸ் பாடம் நடத்திய முறையும், கல்லூரிக்கு எம்.டி.வாசுதேவன் நாயர், சச்சி தானந்தன் போன்ற புகழ் பெற்ற…

  • பூமணி

    திருநெல்வேலி சங்கரன்கோவில் ஆண்டிப்பட்டியில் பூலித்துரை – தேனம்மாள் தம்பதியருக்கு 12.5.1947-இல் பிறந்தார். இயற்பெயர்: பூ.மாணிக்கவாசகம். இளையரசனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகுமுக படிப்பையும், பி.எஸ்சி., பட்டத்தையும் பெற்றார். சென்னையிலுள்ள தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றார். அத்தை மகளான செல்லம் இவரது வாழ்க்கைத் துணை. கவிதா என்றொரு மகள், சிபி, ராஜா என இரு மகன்கள். பூமணி கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு காதல்…