எ.ஜோதி

எ.ஜோதி

Profession எழுத்தாளர்

Biography

திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழையூர் எனும் கிராமத்தில்
எத்திராஜு – அம்மாபொண்ணு தம்பதியருக்கு 7.7.1950 அன்று குழந்தை எழுத்தாளர் பிறந்தார்.
தந்தையார் காவல் துறையில் பணியாற்றினார்.

துணைவியார்:அமுதவள்ளி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்
முனைவர் பட்டம் பெற்றார்.

1973-இல் புதுவை அரசில் பணியைத் தொடங்கினார். 1975-லிருந்து 1977 வரை புதுவை அரசு
பயிற்று ஆசிரிய ராகவும், 1978-லிருந்து 2003 வரை தமிழ் விரிவுரையாளராகவும், 2003
முதல் 2004 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி 2004-இல் பணி நிறைவு பெற்றார்.

சுவாமி விவேகானந்தர் “நாட்டில் ஆன்மிகக் கருத்துகள், நன்னெறிக் கருத்துகள் தழைத்தோங்க
வேண்டும்” என்று பெரிதும் விரும்பினார். அவ்வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட
பேராசிரியர் எ.ஜோதி சிறுவர்கள் எதிர்காலத் தூண்கள். ஆகவே, அவர்களை நெறிப்படுத்த
வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறுவர் கதைகளையும் நூல்களையும் ஏராளமாக எழுதியிருக்கிறார்.

இவருடைய நீதிக்கதைகள் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள 30-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இவரது கதைகளை வெளியிட்டுள்ளன.

அறிவுக் கூர்மைக்கான புதிர்க் கதைத் தொகு திகள்- 10, நன்னெறி கதைத் தொகுதிகள்- 18,
அறிவுக்கு விருந்தாகும் சாமர்த்திய கதைத் – 15, சிரித்து மகிழ முட்டாள் கதைத்
தொகுதிகள்-11, நரி காக்கை எலி முயல் கதை நூல்கள்- 12, வேடிக்கை மந்திரக் கதைகள்- 4,
சிறுவர் புதின நாடக நூல்கள்- 12, ஜோக்ஸ் புத்தகங்கள் – 15, புகழ்பெற்ற கதை நூல்கள்-14,
நற்பண்பை வளர்க் கும் கதை நூல்கள்-21, கதைகள் வழி நீதிக்கதை நூல்கள்-16, சிறுவர்
கதைக்களஞ்சியம் -50 என 198 நூல்களை எழுதியுள்ளார்.

குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் எளிய நடை, மனதை கவரும் காட்சிகள், ஆர்வத்தைத் தூண்டும்
விறுவிறுப்பு ஆகியவற்றை கையாண்டு தனது நூல்களை எழுதியிருப்பதே சிறப்பம்சம் ஆகும்.
இவரது அனைத்து நூல்களும் பல பதிப்புகள் வெளிவருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக
உள்ளது.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 5.2.2010 அன்று நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாரதா
வித்யாலயா ஆண்டு விழாவில் இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில்
இவரது எழுத்துலகப் பணியைப் பாராட்டி ‘விவேகானந்தர் விருது’ வழங்கப் பட்டது. மேலும்,
தமிழக அரசு விருதையும் வழங்கப் பெற்றுள்ளார்.