செ.திவான்
திருநெல்வேலி செங்கோட்டை விசுவநாதபுரத்தில் நா.செய்யது மசூது – செ.காசினம்மாள் பீவி தம்பதியருக்கு 01.09.1954 அன்று பிறந்தார். விஸ்வநாதபுரம் எம்.எம். நடுநிலைப் பள்ளியிலும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்த இவர், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி யில் புகுமுகக் கல்வியையும், அந்நகரிலுள்ள தூய ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ., பட்டப் படிப்பையும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. (வரலாறு) பட்டத்தையும், 1989-இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ‘இந்திய சுதந்திரப் போரில்…
