| Profession | எழுத்தாளர் |
|---|
எஸ்ஸார்சி எனும் புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் எஸ்.ராமச்சந்திரன், கடலூர்
மாவட்டம், தரும நல்லூர், சுந்தரேசன்-மீனாட்சி தம்பதியினருக்கு 04.03.1954 அன்று
பிறந்தார்.
இவரது மனைவி பானுமதி. அஜாய் சுந்தர், லட்சுமண பாரதி என மகன்கள்.
கம்மாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி, வளைய மாதேவி வள்ளலார் உயர் நிலைப் பள்ளி,
கம்பாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில பள்ளிக் கல்வியும், புகுமுக வகுப்பு,
இளநிலை அறிவியல் (வேதியியல்) பட்டப் படிப்பு ஆகியன சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை (ஆங்கிலம்), எம். ஃபில் (ஆங்
கிலம்) இதழியல் (பட்டயம்), தொழிலாளர் நலம் (பட்டயம்) ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மேலும்
வட மொழியும், இந்தியும் பயின்றவர், தற்பொழுது தெலுங்கு பயின்று வருகிறார்.
‘தொழிலாளர் நலம்’ படித்து முடித்தவுடன் 1924-இல் வடலூரிலுள்ள சேஷசாயி இண்டஸ் ட்ரிஸ்
நிறுவனத்தில் கண்காணிப்பாளராக ஆறு மாதங்கள் (1974) பணியாற்றினார். 1975 முதல்
விருத்தாசலம் தொலைத் தகவல் இலாகாவில் ஆபரேடராகவும், 1996-2009இல் கடலூரில் இள நிலை
கணக்கு அதிகாரியாகவும், 2010- 2014 சென்னையில் முதுநிலை தொலைபேசி மேற்பார்
வையாளராகவும் பணியாற்றி 31.03.2014-இல் பணிநிறைவு பெற்றார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அச்சிறுகதைகள் ஆறு தொகுதிகளாக
வெளிவந்துள்ளன. மேலும், நான்கு புதினங்கள், மூன்று கவிதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத்
தொகுதிகள், இரு மொழிபெயர்ப்பு நூல்கள், ஓர் ஆங்கிலக் கவிதைத் தொகுதி, ஓர் ஆங்கில உரை
நடை நூல், ஒரு தொகுப்பு நூல் ஆகியன வெளி வந்துள்ளன.
இவர்தம் நூல்களுக்காக எட்டையபுரம் பாரதி விழாப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,
மாநில வங்கி விருது, சேலம் தாரையார் விருது, தமிழக அரசு விருது, கம்பம் பாரதி
சங்க விருது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பாராட்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
எஸ்ஸார்சி, தொழிற்சங்க இயக்கத்தினால் மார்க்சீயத்தின்பாற் ஈர்க்கப்பட்டார். பத்து ஆண்டுகள் கலை
இலக்கியப் பெருமன்ற செய லாளராகப் பணியாற்றியுள்ளார். பொது வுடைமை மற்றும் இடதுசாரிச்
சிந்தனைகளை இவரின் படைப்புகளில் காணலாம்.
தற்போது குறிஞ்சிவேலனைக் கொண்டு வெளிவரும் ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு காலாண்டிதழின்
ஆசிரியர் குழுவிலும், பட்டுக் கோட்டையிலிருந்து வெளிவரும் ‘இலக்கியச் சிறகு’, ஆங்கில
இதழ் ‘ஷிலீவீஸீமீ’ இதழ்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல் பட்டுக்
கொண்டிருக்கிறார்.