Sengai Aaliyan
க. குணராசா’ என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்து எழுத்தாளர். ஈழத்தின் புவியியல், வரலாறு, மற்றும் கடலோர மக்களின் வாழ்வியலை விறுவிறுப்பான புனைகதைகளாக 30-க்கும் மேற்பட்ட நாவல்களில் தந்தவர். சிறந்த படைப்பு: வாடைக்காற்று (நாவல்)
க. குணராசா’ என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்து எழுத்தாளர். ஈழத்தின் புவியியல், வரலாறு, மற்றும் கடலோர மக்களின் வாழ்வியலை விறுவிறுப்பான புனைகதைகளாக 30-க்கும் மேற்பட்ட நாவல்களில் தந்தவர். சிறந்த படைப்பு: வாடைக்காற்று (நாவல்)
ஈழத்துச் சிறுகதை உலகில் அசாத்திய மொழிநடை கொண்டவர். மனித மனதின் விசித்திரங்கள், தனிமை, மற்றும் போர்க்காலத்து மனிதர்களின் உளவியல் சிதைவுகளை நுட்பமாக எழுதுபவர். சிறந்த படைப்பு: : மூன்றாம் சிலுவை
எளிய மனிதர்களின் அன்றாடப் போராட்டங்கள், கிராமப்புற வாழ்வின் சிதைவுகள், மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் தார்மீகக் கேள்விகளைத் தன் தீவிரமான புனைவுகளில் கொண்டு வருபவர். சிறந்த படைப்பு: பாம்புகள் மேயும் கனவு நிலம்
ஈழப்போரின் கொடூரங்கள், விடுதலை இயக்கங்களின் உள்முரண்பாடுகள், மற்றும் புலம்பெயர் அகதி வாழ்வின் அவலங்களை அதிரடியான, ஆழமான மொழியில் பதிவு செய்யும் தீவிர அரசியல் எழுத்தாளர். சிறந்த படைப்பு: கொரில்லா (நாவல்)
ஈழத்து வரலாற்றுப் பின்னணி மற்றும் ஈழப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைப் பிரம்மாண்டமான நாவல் வரிசைகள் மூலம் ஆவணப்படுத்திய மிக முக்கியமான நாவலாசிரியர். சிறந்த படைப்பு: கனவுச்சிறை (5 பாகங்கள் கொண்ட நாவல்)
ஈழப்போர் களத்தில் நேரடியாகப் பங்கேற்றவர். போரின் எதார்த்தங்கள், பதுங்கு குழி வாழ்க்கை, மற்றும் சாமானிய மக்களின் வலிகளை எவ்வித ஒப்பனையுமின்றி அச்சு அசலாகப் பதிவு செய்பவர். சிறந்த படைப்பு: நஞ்சுண்ட காடு (நாவல்)
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் செல்லையா நாடார் -செல்லத்தாய் தம்பதியருக்கு 30.03.1964-இல் பிறந்தார். ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார். இவரையும் தம்பியையும் காப்பாற்றி வளர்த்தது அம்மாதான். பள்ளிப் பருவத்திலேயே பரிட்சைத்தாளில் ‘ஆத்தூரான் தின்ன தோசை’ என்றொரு கதையை எழுதி கொடுத்து விட்டார். ஆசிரியர் தேவதாசன் இவரைத் தண்டிக்காமல், பாராட்டி புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். கல்லூரியில் படிக்கும்போது இவருக்கு பேராசிரியராகப் பணியாற்றிய நாவலாசிரியர் ஐசக் அருமைராஜனும் ஊக்கம் கொடுத்தார். அக்காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் ஏராளமாக எழுதினார். கேரளப்…
8.12.1964 அன்று பிறந்தார் இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 22-ம் வயதில் (1986) அறிவியல், மொழியியல் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1996-இல் சென்னையிலுள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஆனார். 1999 முதல் கடலூர், கிருஷ்ணசாமிநினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல் வராக சிறப்பாக பணியாற்றினார். 2018-இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராய் இருந்து தனது…
மதுரை கோரிப்பாளையத்தில், சம்சுதீன் – ரகிமா தம்பதியினருக்கு பிறந்தார். இயற்பெயர் நாசர். 1982-இல் ‘ஆர்னிகா’ என்றொரு மாதப் பத்திரிகையை ஐந்து இதழ்கள் நடத்தினார். அந்த ஈடுபாட்டில் ‘ஆர்னிகா நாசர்’ என அரசு கெஜட்டில் பெயர் மாற்றிக் கொண்டார். இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக எம்.ஏ., (சமூகவியல்) எம்ஃபில் (சமூகவியல்), மருத்துவ மேலாண்மை நிர்வாகத்தில் எம்.ஏ. ஆகிய பட்டங்களையும், வெகுஜன தொடர் புக்கான முதுகலை பட்டயம், மருத்துவ நிர்வாகத்தில் பட்டயம் ஆகியவற்றையும்…
திருவண்ணாமலையில் எம்.தனக்கோட்டி – தனம் அம்மாள் இணையருக்கு 27.09. 1965-இல் பிறந்தார். திருவண்ணாலைக்கு அருகிலுள்ள அண்ணாமலைபுரம் அரசினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், சாரோன் போர்டிங் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், மேல்நிலைக் கல்வியை டேனிஷ் மிஷன் பள்ளியிலும் கற்றார். கல்லூரியில் இள வணிகவியல் பயின்றார். அக்காலத்தில் நண்பர்களுடன் பழகியதைவிட பற்பல புத்தகங்களுடன் பழகினார். பல்வேறு கருத்தரங்குகள், மேடைப் பேச்சுகளில் பங்கேற் றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கம் மிகுதியாகக் காணப்பட்டதால் கல்லூரிக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். கல்லூரிப்…