| Profession | எழுத்தாளர் |
|---|
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் செல்லையா நாடார் -செல்லத்தாய் தம்பதியருக்கு
30.03.1964-இல் பிறந்தார்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார். இவரையும் தம்பியையும் காப்பாற்றி
வளர்த்தது அம்மாதான்.
பள்ளிப் பருவத்திலேயே பரிட்சைத்தாளில் ‘ஆத்தூரான் தின்ன தோசை’ என்றொரு கதையை எழுதி
கொடுத்து விட்டார். ஆசிரியர் தேவதாசன் இவரைத் தண்டிக்காமல், பாராட்டி புத்தகங்களை
வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
கல்லூரியில் படிக்கும்போது இவருக்கு பேராசிரியராகப் பணியாற்றிய நாவலாசிரியர் ஐசக்
அருமைராஜனும் ஊக்கம் கொடுத்தார். அக்காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் ஏராளமாக எழுதினார்.
கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலை படித்த காலத்தில் மலையாள இலக்கியங்களை
அதிகமாகப் படித்தார். இடது சாரி இயக்கத்தினருடன் ஏற்பட்ட தொடர்பினால் பாலஸ்தீன,
ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களைப் படித்தார். இந்த வாசிப்பு அனுபவங்களோடு கதை
எழுதத் தொடங்கினார்.
அச்சில் வெளிவந்த இவரது முதல் கதை ‘ஈஸ்டர் கோழி’. ‘நண்பர் வட்டம்’ எனும் இதழில்
வெளிவந்தது. இக்கதை பல்கலைக் கழகப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்
கப்பட்டுள்ளது.
1988-இல் ‘கைதமுள்’ என்றொரு கவிதை நூலை வெளியிட்டார். 1992-இல் வெளிவந்த ‘உக்கிலு’
என்றொரு சிறுகதைத் தொகுதிக்கு ‘லில்லி தேவசிகாமணி விருது’ கிடைத்தது. 2010-இல்
வெளிவந்த ‘கயம்’ சிறுகதைத் தொகு திக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்
‘ஜெஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது’ கிடைத்தது. 2012-இல் வெளிவந்த ‘குன்னி முத்து’
நாவல், சிறந்த நாவலுக்கான ‘ஆனந்த விகடன்’ விருதையும், ஜெயந்தன் படைப்பிலக்கிய
விருதையும் பெற்றது. சென்னை புத்தகக் கண் காட்சியில் அதிகம் விற்பனையான பத்து
புத்தகங்களில் இதுவும் ஒன்று.
இவரது துணைவியார் டாக்டர் ஞா.சரோஜாபாய். ஹோமியோபதி மருத்துவர். இவர்களுக்கு எஸ்.எஸ்.
சீசன்பால்க், எஸ்.எஸ்.தியான்செல் என இரண்டு பிள்ளைகள்.
சமீப காலமாக திரைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர், திரைப்படம் ஒன்றிற்கு உரையாடல் எழுதி
வருகிறார். மேலும் வன்மம் என்ற குறும்படம் ஒன்றில் மையக் கதாபாத்திரம் ஒன்றில்
நடித்திருக்கிறார்.
குமரி வட்டார வாழ்க்கையை, வட்டார வழக்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் இவர்
தற்போது மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கல்லூரியில் பேராசிரிய ராகப் பணியாற்றி
வருகிறார்.