எழுத்தாளர்

  • மனுஷ்யபுத்திரன்

    தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் மனுஷ்யபுத்திரன். இவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்கவேண்டிய கடமை எழுத்தாளர்களின் குரலுக்கு இருக்கிறது. அதனை மிகச் சரியாகவே நிறைவேற்றி வருகிறார். சிறந்த கவிஞராகவும் நிகழ்ந்து வருகிறார். இவருடைய எழுத்துகளில் உண்டான படைப்புகள் வருமாறு: 1. என்ன மாதிரியான காலத் தில் வாழ்கிறோம், 2. டினோசர் கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன, 3. தோன்ற…

  • கலாவிசு

    காரைக்காலில் இராமசாமி -ஜோதி தம்பதியருக்கு 07.03.1962 அன்று பிறந்தார். இயற்பெயர் கலைச்செல்வி. இவரது பெயரின் முதல் இரண்டு எழுத்துகளையும், இவரது கணவர் பெயரான விசுவலிங்கத்தின் முதல் இரண்டு எழுத்துகளையும் இணைத்து ‘கலாவிசு’ என்று புனைபெயராக்கிக் கொண்டார். இவர்களுக்கு கார்த்திக், அம்ரிதா என இரு குழந்தைகள். திருமணத்திற்குப் பிறகு புதுச்சேரியில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு உடல், மனச் சிக்கல்களுக்கு உள்ளான இவர் 9-ஆம் வகுப்போடு படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டார். பொதுவாக, தமது வாழ்க்கை நிகழ்வுகளை, எண்ணங்களை யாருடனும்…

  • முனைவர் வெ.இறையன்பு

    சேலம் காட்டூரில் 16.9.1963 அன்று பிறந்தார். பி.எஸ்ஸி.(வேளாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.எஸ்ஸி. (உளவியல்), எம்.எஸ்ஸி, எம்.பி.ஏ, பி.எச்.டி. (வர்த்தக நிர்வாகம்) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயக்கோட்டையில் மேலாண்மை அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்த இவர், 1988-இல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று நாகையில் சார்-ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றினார். அரசு அதிகாரி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முக ஆற்றல் கொண்டவர். 4 கவிதைத்…

  • ந.முருகேசபாண்டியன்

    மதுரை சமயநல்லூரில் நடராஜன் – தங்கம் இணையர்க்கு 26.12.1957-இல் பிறந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்புலத்தில் முதுகலை பட்டமும், தமிழ் இளம் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இளம் அறிவியல் நூலகர் மற்றும் தகவல் அறிவியல் பட்டமும் பெற்றார். 1984-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் நூலகரானார். சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி மூலம் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் முதுகலைப் பட்டத்தையும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில்…

  • பாவண்ணன்

    விழுப்புரம் வளவனூர் கிராமத்தில் பலராமன் – சகுந்தலா தம்பதியரின் மூத்த மகனாக 20.10.1958 அன்று பிறந்தார். இயற்பெயர் பாஸ்கரன். இவரது தந்தை சிறு சிறு விவசாயத் தொழில், நெசவுத் தொழில் போன்றவற்றை செய்து, இறுதியில் தையலகம் வைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்திவந்தார். குடும்பப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, கல்லூரி படிப்பை இளநிலையோடு நிறுத்திக்கொண்டு, பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து 1978-இல் அஞ்சல் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1981 முதல் தொலைபேசித் துறையில்…

  • ஆண்டாள் பிரியதர்ஷினி

    கவிஞர் நெல்லை கணபதி – புலவர் சுப்புலட்சுமி தம்பதியர்க்கு நெல்லையில் பிறந்தார் சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் சிறப்புத் தகுதியுடனும் தேர்ச்சி அடைந்தார். பெண்கள் விடுதலையும், விழிப்புணர்வும் பெறவேண்டும் என்பதே இவரது எழுத்தின் நோக்கமாக உள்ளது. இவரது படைப்புகள்: புதினங்கள் 8, சிறுகதைத் தொகுதிகள் 8, கவிதைத் தொகுதிகள் 11, கட்டுரைத் தொகுதிகள் 4. இவர்தம் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகளையும்,…

  • இந்திரா சௌந்தர்ராஜன்

    சேலத்தில் ஏ.பார்த்தசாரதி -பா. இந்திரா தம்பதியருக்கு 13.11. 1958 அன்று பிறந்தார். இயற்பெயர் சௌந்தர்ராஜன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பி.ஏ.பட்டம் பெற்று, டி.வி.எஸ். நிறுவனத்தில் பணி. ‘சிகரம்’ இதழில் பா. செயப் பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’ கதையைப் படித்து அந்தத் தாக்கத்தில் கதை எழுதத் தொடங்கினார். தனது பெயருக்கு முன் தாயின் பெயரையும் இணைத்து ‘இந்திரா சௌந்தர்ராஜன்’ எனும் பெயரில் எழுதுகிறார். 1978-இல் இவர் எழுதிய ‘ஒன்றின் நிறம் இரண்டு’ எனும் முதல்…

  • சந்திரகாந்தன்

    இராமநாதபுர இரா.காவனூர் கிராமத்தில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய சு.அருணாசலம் -சேதுபருவதம் தம்பதியருக்கு 22.09.1957-இல் பிறந்தார். இயற்பெயர்: அ.குப்புசாமி. சிறு வயதிலேயே தாய்வழித் தாத்தா மூலம் பக்தி இலக்கியங்களையும் சங்க இலக்கியங்களையும், பாட்டி மூலமாக கதைகளையும் கேட்டு அறிந்தார். நூலகங்களுக்குச் சென்று புத்த கங்கள் வாசிக்க ஆரம்பித்தார். ஜெயகாந்தனின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவரது பெயரிலுள்ள ‘காந்தன்’ என்பதுடன் சந்திரனை இணைத்து ‘சந்திரகாந்தன்’ எனப் புனைபெயர் வைத்துக் கொண்டார். பின்னர் புதுமைப்பித்தன், பாரதி, இன்குலாப் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் படித்தார். ஏழாம்…

  • பசி.ப.பரமசிவம்

    தமிழின் ஜனரஞ்சக இதழ்களில் ஏராளமான ஒரு பக்கக் கதைகளையும், சிறுகதைகளையும் எழுதிப் புகழ்ப் பெற்றவர் எழுத்தாளர் பசி ப.பரமசிவம், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கிடையூர் கிராமத்தில் பிறந்தவர். ஈரோடு, சிக்கையா நாயக்கர் மகாஜனக் கல்லூரியில் புதுமுக (பி.யூ.சி) வகுப்பு படித்தபோது எழுத்தாளர் தமிழ்வாணன் நடத்திய ‘கல்கண்டு’ இதழின் தீவிர வாசகர் ஆனார். இவர் எழுதிய மூன்று கடிதங்கள் கல்கண்டு இதழில் வெளிவந்து இவரை எழுதுவதற்கு உற்சாகம் அளித்தது. 1962-இல் கோவை, பேரூர் சாந்தலிங்கம்அடிகளார் தமிழ்க் கல்லூரியில்…

  • முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

    கரூரில் பி.எஸ். சுப்பிரமணியம் – கே.ஜானகி தம்பதியருக்கு 01.07.1957 அன்று பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணன். திருப்பூரில் அதிக காலம் வாழ்ந்ததால் தன் பெயருக்கு முன்னால் திருப்பூர் என சேர்த்துக் கொண்டார். திருப்பூரிலுள்ள சிக்கண்ணா கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். அப்போதே இவரது ‘நானும் நானும்’ என்ற முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. ஒரு நாள் வகுப்பறையில், தமிழ்ப் பேராசிரியர் முப்பால்மணி ‘தாமரை’ இதழில் வெளிவந்த ஒரு சிறு கதையை வாசித்துக் காட்டி, “இந்தக் கதையை எழுதியது…