| Profession | எழுத்தாளர் |
|---|
கவிஞர் நெல்லை கணபதி – புலவர் சுப்புலட்சுமி தம்பதியர்க்கு நெல்லையில் பிறந்தார்
சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுகலைப்
பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் சிறப்புத்
தகுதியுடனும் தேர்ச்சி அடைந்தார்.
பெண்கள் விடுதலையும், விழிப்புணர்வும் பெறவேண்டும் என்பதே இவரது எழுத்தின் நோக்கமாக
உள்ளது.
இவரது படைப்புகள்: புதினங்கள் 8, சிறுகதைத் தொகுதிகள் 8, கவிதைத் தொகுதிகள் 11,
கட்டுரைத் தொகுதிகள் 4.
இவர்தம் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகளையும், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளையும் படம்
பிடித்துக் காட்டியுள்ளார்.
“அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாம் பழங்காலம் இனி உச்சம் ஞானம் திடம் உயிர்ப்பு
எங்கள் புதுக்கோலம்” என்பது இவரது கவிதை வரிகள்.
இவரது ‘சரஸ்வதியின் ஏடு தொலைந்து போனது’, தீ நாக்குகள் சரசுவைத் தின்றபோது’,
‘கதையைத் தின்று பசியாறி’ ஆகியவை ‘தினமணிக் கதிர்’ சிறப்பு சிறுகதைப் பரிசு
களையும், ‘கற்பெனப்படுவது’ தினகரன் சிறப்பு சிறுகதைப் பரிசையும், ‘சரஸ்வதியைக் கரைத்த
பனிக்கட்டி’, ‘முத்தங்கள் தீர்ந்துவிட்டன’ தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி
பரிசையும், ‘இரவல் முகமும் கடன் வாங்கிய சுவாசமும்’, ‘அப்பா வாசனை’ ஆகியவை
மின்னம்பலம் சிறந்த சிறுகதைப் பரிசுகளையும், ‘தோஷம்’, கழிவு, தீ, பூஜை’, ஆகியவை
‘ஆனந்த விகடன், பவழ விழா முத்திரைக் கதை களாகவும், ‘தோஷம்’ சிறுகதை, திருப்பூர்
தமிழ்ச் சங்க விருதையும், லில்லி தேவசிகாமணி விருதையும் பெற்றது. ‘விதை நெல்’
கலைமகள் மாத இதழ் இலக்கியத் திருவிழா தங்கப்பதக்கத் தையும், ‘சந்தோசம் விற்பவன்’ இதயம்
2001 தீபாவளி சிறப்பிதழ் முத்திரைக் கதையாகவும், ‘கழிவு’ இலக்கியச் சிந்தனையின்
2004-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகவும், ‘பெரு மூச்சின் நீளம்’ ஸ்டேட் வங்கி இலக்கியப்
பரிசையும், திருப்பூர் அரிமா சங்க விருதையும், ‘தகனம்’ காசியூர் ரங்கம்மாள் இலக்கிய
விருதையும், ‘சுயம் பேசும் கிளி’ கவிதைகள் கே.ஆர்.ஜி. நாகப்பன் ராஜம்மாள் விருதையும்,
‘சாண அடுப்பும் சூரிய அடுப்பும்’ என்ற கட்டுரை மத்திய அரசின் பரிசையும் பெற்றன.
மேலும், கவிஞர் வைரமுத்து விருது, பாவலர் முத்துசாமி விருது, தமிழக அரசின் ‘கலை
மாமணி’ விருது ஆகியவற்றை வழங்கப் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகளை கலைஞர் மு.கருணாநிதி, வைரமுத்து, வல்லிக்கண்ணன், ராஜம் கிருஷ்ணன்,
அனுராதா ரமணன், இளந்தேவன், ஏ.வி.எம்.சரவணன், கீரை.பிரபாகரன், தஞ்சை இனியன், இளசை
அருணா, மொஹமத் முஸ்தஃபா, ஜெயபாஸ்கரன், புனர்வசு, ப.ந.ராமசாமி போன்ற ஆளுமைகள்
பாராட்டியுள்ளனர்.