சந்திரகாந்தன்

சந்திரகாந்தன்

Profession எழுத்தாளர்

Biography

இராமநாதபுர இரா.காவனூர் கிராமத்தில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய சு.அருணாசலம்
-சேதுபருவதம் தம்பதியருக்கு 22.09.1957-இல் பிறந்தார். இயற்பெயர்: அ.குப்புசாமி.

சிறு வயதிலேயே தாய்வழித் தாத்தா மூலம் பக்தி இலக்கியங்களையும் சங்க இலக்கியங்களையும்,
பாட்டி மூலமாக கதைகளையும் கேட்டு அறிந்தார். நூலகங்களுக்குச் சென்று புத்த கங்கள்
வாசிக்க ஆரம்பித்தார். ஜெயகாந்தனின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவரது பெயரிலுள்ள ‘காந்தன்’
என்பதுடன் சந்திரனை இணைத்து ‘சந்திரகாந்தன்’ எனப் புனைபெயர் வைத்துக் கொண்டார்.

பின்னர் புதுமைப்பித்தன், பாரதி, இன்குலாப் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையும்
படித்தார். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே ‘கண்ணன்’ சிறுவர் இதழுக்காக ஒரு கதை
எழுதினார். ஆனால் அது பிரசுரமாகவில்லை.

1975 காலகட்டத்தில் எழுதிய ‘அவர்கள் குருதிகளில் ஒரு வரலாறு எழுதப்படுகிறது’ எனும்
சிறுகதை ‘தாமரை’ இதழில் வெளிவந்தது. தென்னாப்பிரிக் காவில் உரிமைக்குப் போராடிய
கறுப்பர்களுக்கு ஆதரவான சிறுகதை அது.

இவரது முதல் சிறுதைத் தொகுதி ‘புல்லைப் புசியாத புலிகள்’. இரண்டாவது சிறுகதைத்
தொகுதி ‘சப்தக்குழல்’. ‘ஆளுக்கொரு கனவு’ முதல் சிறுகதைத் தொகுதி. ‘வைகையில் வெள்ளம்
வரும்’ எனும் முதல் நாவல் ‘கல்பனா’ இதழில் வெளிவந்தது. நூலாக வரவில்லை. ‘தழல்’ இவரது
இரண்டாவது நாவல். ‘அண்ட காவனூர் உயர்நிலைப் ரண்டப் பட்சி’ இவரது குறுநாவல்.

பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
படித்த இராமநாதபுரம் சுவாட்ஸ் பள்ளியில் உயர்நிலை கல்வியை முடித்தார். பி.யூ.சி. எனும்
புதுமுக வகுப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரி யிலும், பி.எஸ்ஸி (கணிதம்) பட் டத்தை
மதுரை தியாகராசர் கல்லூரியிலும், எம்.ஏ., (தமிழ்) பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்
கழகத்திலும் பெற்று,

விளிம்புநிலை சமூகத்தினர், குறிப்பாக பெண்கள் தங்களின் இன்னல்களுக்கான உண்மையான
காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுடன் போராடி வெற்றி பெறவேண்டும் என்பதே இவரது எழுத்தின்
இலக்காக இருக் கிறது.

‘படிக்கப் படிக்கப் பாரதி’ எனும் ஆய்வு நூலை ராகுல்ஜி அறக்கட்டளைக்காக எழுதினார்.
அந்நூலில் இன்றைய சமூக அவலங்களைத் தீர்ப்பதற்குப் பாரதியின் கருத்தாழமிக்க வழி
காட்டல்களையும், பாரதியின் தீர்க்கதரிசனத் தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.