| Profession | எழுத்தாளர் |
|---|
மதுரை சமயநல்லூரில் நடராஜன் – தங்கம் இணையர்க்கு 26.12.1957-இல் பிறந்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்புலத்தில் முதுகலை பட்டமும், தமிழ் இளம்
ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இளம் அறிவியல் நூலகர் மற்றும் தகவல் அறிவியல் பட்டமும்
பெற்றார்.
1984-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். கணேசர்
செந்தமிழ்க் கல்லூரியில் நூலகரானார். சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி மூலம் நூலகம்
மற்றும் தகவல் அறிவியல் முதுகலைப் பட்டத்தையும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நூலகம்
மற்றும் தகவல் அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6.9.1987 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார்: நிலக்கோட்டை உஷா. இத்தம்பதியருக்கு
கௌதம்ராஜ், மோனிஷா தங்கம் ஆகிய இரு குழந்தைகள்.
கல்லூரிப் பருவத்தில் தீவிரமான இலக்கிய வாசிப்பாளராக இருந்த முருகேச பாண்டியன்,
நாளடைவில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினார். குறிப்பாக, அக்கால
கட்டத்தில் சோவியத் ரஷ்யாவிலிருந்து தமிழில் வெளியிடப்பட்ட ரஷ்ய இலக்கிய மேதைகளின்
படைப்புகள் இவரிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் இவரது இலக்கிய அணுகுமுறை
மாற்றம் அடைந்தது.
மார்க்சிய அறிஞர்களின் அரசியல் நூல்களைப் படித்து மார்க்சியத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.
இடதுசாரி இயக்கங்களில் சில ஆண்டுகள் செயலாற்றினார். பின்னர் இவ்வியக் கங்களிலிருந்து
விலகினாலும் இவரது படைப்பு களில் இடதுசாரிக் கண்ணோட்டமே காண முடிகிறது.
1979-இல் இவர் எழுதிய முதல் கவிதை ‘அக்காக்கள்’ நெல்லையிலிருந்து வெளிவரும் ‘தேடல்’
இதழில் வெளிவந்தது. 1981-இல் இவரு டைய சிறுகதை ‘எங்கள் தாத்தா வீட்டில் எலி கூட
இல்லை’ சிறுகதை ‘செம்மலர்’ இதழில் வெளியாயிற்று.
1993 முதல் பல்வேறு பத்திரிகைகளில் இவர் எழுதிய 55 புத்தக மதிப்புரைகள் தொகுக்கப்பட்டு
‘பிரதிகளின் ஊடே பயணம்’ எனும் முதல் நூலாக 2003-இல் வெளிவந்தது. இந்நூலிற்கு ‘சுடர்’
அமைப்பின் விருது கிடைத்தது. இதுவரை இலக்கியத் திறனாய்வு தொகுதிகள்- 8, மானிட வியல்
துறை சார்ந்தவை- 2, நாட்டுப்புறவியல் -1, மொழிபெயர்ப்பு-1, சிறுகதைத் தொகுதி-1, என்
இலக்கிய நண்பர்கள் எனும் ஒரு நூல், பொதுக் கட்டுரைகள்-1, தொகுப்பு நூல்கள்-4 ஆகிய நூல்கள்
வெளி வந்துள்ளன. பிறருடன் இணைந்து 2 ஆய்வு நூல்களையும், 6 நூல்களைத் தனித்தும்
பதிப்பித்து உள்ளார்.