| Profession | எழுத்தாளர் |
|---|
விழுப்புரம் வளவனூர் கிராமத்தில் பலராமன் – சகுந்தலா தம்பதியரின் மூத்த மகனாக
20.10.1958 அன்று பிறந்தார். இயற்பெயர் பாஸ்கரன்.
இவரது தந்தை சிறு சிறு விவசாயத் தொழில், நெசவுத் தொழில் போன்றவற்றை செய்து,
இறுதியில் தையலகம் வைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை
நடத்திவந்தார்.
குடும்பப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, கல்லூரி படிப்பை இளநிலையோடு
நிறுத்திக்கொண்டு, பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து 1978-இல் அஞ்சல் துறையில்
எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1981 முதல் தொலைபேசித் துறையில் பெங்களூருவில்
பணிபுரிந்து வந்தார்.
22.08.1984-இல் அமுதாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மயன் என்றொரு மகன்.
1981-இல் ‘தனியொரு மனிதனுக்கு உணவில் லையேல்…’ எனும் முதல் சிறுகதையை
எழுதியுள்ளார். எனினும், அச்சில் வெளிவந்த அவரது முதல் கதை ‘பழுது’ என்பதாகும்.
இக்கதை 1981-இல் ‘நீலம்’ இதழில் வெளிவந்தது.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ 12 சிறு கதைகளுடன்
எழுத்தாளர் பிரபஞ்சன் அணிந் துரையுடன் வெளிவந்தது. அதே ஆண்டில் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’
என்னும் நாவல் ஒன்றும் வெளிவந்தது. இந்நாவல் புதுவை அரசின் விருதைப் பெற்றது.
இதுவரை சிறுகதை நூல்கள்-17, குறுநாவல்கள் -2, நாவல்கள்- 3, கவிதைத் தொகுதிகள்- 6,
மொழியாக்க நூல்கள்-20, கட்டுரைத் தொகுதிகள் -17 வெளிவந்துள்ளன. இவருடைய பல படைப்புகள்
ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகியவற்றில் மொழியாக்கம் பெற்றுள்ளன.
பாவண்ணனின் மொழிபெயர்ப்புப் பணி அதிசயத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துகிறது. சற்றேறக்
குறைய பதினைந்து ஆண்டுகளில் கன்னட மொழியின் அகலத்தையும் ஆழத்தையும் அறிந்துள்ளார்.
சாகித்ய அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப் புக்கான விருது, தமிழக அரசு விருது,
புதுவை அரசு விருது, இலக்கியச் சிந்தனை விருது, அமுத சுரபி விருது, லில்லி
தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, கதா விருது போன்ற பல
விருதுகளைப் பெற்றுள்ளார்.