முனைவர் வெ.இறையன்பு

முனைவர் வெ.இறையன்பு

Profession எழுத்தாளர்

Biography

சேலம் காட்டூரில் 16.9.1963 அன்று பிறந்தார். பி.எஸ்ஸி.(வேளாண்மை), எம்.ஏ. (தொழிலாளர்
மேலாண்மை), எம்.எஸ்ஸி. (உளவியல்), எம்.எஸ்ஸி, எம்.பி.ஏ, பி.எச்.டி. (வர்த்தக நிர்வாகம்)
ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

ராயக்கோட்டையில் மேலாண்மை அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்த இவர், 1988-இல் இந்திய
ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று நாகையில் சார்-ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். அதன்
பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றினார்.

அரசு அதிகாரி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முக ஆற்றல்
கொண்டவர்.

4 கவிதைத் தொகுதிகள், 4 சிறுகதைத் தொகுதிகள், 3 புதினங்கள், 2 உருவகக் கதைத்
தொகுப்புகள், 4 வழிகாட்டி, 2 இளைஞர்களுக் கானவை, 3 வானொலி உரைகள், 3 ஆன்மிக நூல்கள்,
3 விழிப்புணர்வு நூல்கள், 2 வரலாற்றுக் கட்டுரை நூல்கள், 2 வாழ்வியல், 2 ஆங்கிலம் எனப்
பல்துறை சார்ந்த 34 நூல்களை எழுதியுள்ளார்.

அச்சு ஊடகங்கள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் இவரது படைப்புகள், உரைகள், இவர்
பற்றிய செய்திகள், உரையாடல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இறையன்புவின் அரசுப் பணியையும் இலக்கியப் பணியையும் பாராட்டும் விதமாக பல்வேறு
விருதுகளையும் பரிசுகளையும் வழங்கப் பெற்றுள்ளார்.

1998-இல் சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருதையும், 1998, 1999 ஆகிய
இரு ஆண்டுகளும் கொடி நாள் வசூலிற்கான விரு தையும் பெற்றுள்ளார்.

திருப்பூர் தமிழ்ச் சங்கம் 1996-இல் இவரது ‘வாய்க்கால் மீன்கள்’ கவிதைத் தொகுதியையும்,
1998-இல் ‘ஆத்தங்கரை ஓரம்’ எனும் புதினத் தையும், 2021-இல் ‘பத்தாயிரம் மைல் பயணம்’
எனும் கட்டுரை நூலையும் சிறந்த நூல்களாகத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி சிறப்பித்
துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி 1998-இல் ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ மற்றும் 2003-இல் ‘ஏழாம்
அறிவு’ ஆகிய இவரது கட்டுரை நூல் களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தன.

2005-இல் அமெரிக்காவில் நடைபெற்ற பன் னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து இவர்
அளித்த கட்டுரை முதல் பரிசைப் பெற்றது. அதேபோல, 2011-இல் வாஷிங்டனில் நடைபெற்ற
பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி இவரால் அளிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப்
பெற்றது.

இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற நூலிற்கு ‘தினத்தந்தி’ இரண்டு லட்சம்
ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற பரிசை பாரதப் பிரதமர்
கைகளால் வழங்கிச் சிறப்பித்தது.

தற்போது 2021 முதல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.