இரா.நடராசன்

இரா.நடராசன்

Profession எழுத்தாளர்

Biography

8.12.1964 அன்று பிறந்தார் இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம்
ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

22-ம் வயதில் (1986) அறிவியல், மொழியியல் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் 1996-இல் சென்னையிலுள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஆனார். 1999
முதல் கடலூர், கிருஷ்ணசாமிநினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல் வராக சிறப்பாக
பணியாற்றினார். 2018-இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.

தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராய் இருந்து தனது சிறப்பான
பங்களிப்பை அளித்தார். தமிழக அறிவியல் கழகத் திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ள இவர்
தமிழக மாணவர்கள் மத்தியில் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

1976-இல் இவரது 12-வது வயதில் இவரது முதல் கவிதை ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி
வந்தது. 1982-இல் முதல் கவிதைத் தொகுதி வெளியானது. பின்னர் கதைகள் எழுதத்
தொடங்கினார். இவரின் முதல் சிறுகதையான ‘இரவாகி’ 1991-இல் ‘கணையாழி’ இதழில் வெளி
யானது. இவரது சிறுகதைகள் ‘இரா.நடராசன் கதைகள்’ எனும் ஒரே தொகுதியாக 50 கதை
களுடன் வெளிவந்துள்ளது.

சிறுவர்களுக்கான நாவல், சிறுகதை, தொடர் கதை, நாடகம் போன்ற பல படைப்புகளை
படைத்துள்ளார். நாகா, மலர் அல்ஜீப்ரா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும், பூமே ஸ்பேசுக்குப்
போகலாம் வரிய்யா, ரஃப் நோட்டு, விஞ்ஞான விக்கிரமாதித்தன் ஆகியவை இத்தகை யவை. துளிர்
இதழில் தொடராக எழுதிய 12 விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் கதைகள் ‘வரலாறு மறந்த விஞ்ஞானிகள்’
எனும் நூலாக வெளிவந் துள்ளது.

ஐன்ஸ்டீன் முதல் ஹாங்காங் வரை, கணிதத்தின் கதை, உலகத் தொழில்நுட்ப முன் னோடிகள், உலகப் பெண்
விஞ்ஞானிகள் ஆகியவை பிற அறிவியல் நூல்கள். ‘செய்து பார் இளம் விஞ்ஞானியே’ என்ற
தலைப்பில் மூன்று சிறு சிறு நூல்களை எழுதியுள்ளார். இப்படியாக அறிவியல் தமிழுக்கு
நடராசனின் பங்களிப்பு மிக முக்கியமானது.

கறுப்பு அடிமையின் சுயசரிதை, பயா ஃபராவை நோக்கி, இடையில் ஓடும் நதி, அறிவியல்
வளர்ச்சி மற்றும் வன்முறை, இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை, சூறா வளியும்
அடிபணியும் கியூபாவும், ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்கான கல்விமுறை ஆகியவை இவரது
தமிழாக்க நூல்கள். மேலும் ஏராளமான அறிவியல் தமிழ் கலைச் சொற்களை உருவாக்கித்
தந்துள்ளார். புத்தகங்களைப் பற்றி மட்டுமே பேசும் ‘புத்தகம் பேசுது’ மாத இதழின்
ஆசிரியராகவும் உள்ளார்.

திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது,
லில்லி தேவசிகாமணி விருது, சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது, தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.