திலகவதி

திலகவதி

Profession எழுத்தாளர்

Biography

தர்மபுரியில், கோவிந்தசாமி-சரசுவதியம்மாள் தம்பதியருக்கு 10.03.1951 அன்று பிறந்தார்.
தந்தை கோவிந்தசாமி இராணுவத்தில் பணிபுரிந்தவர். தாயார் சரசுவதியம்மாள் பள்ளி ஆசிரியை.

வடஆற்காடு மாவட்டம் ஆக்சிலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், சென்னை
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1976-இல்
இ.கா.ப. தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் முதல் பெண் இ.கா.ப. அதிகாரி எனும்
பெருமைக்குரியவர் ஆனார்.

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர், காவல்துறை கண்காணிப் பாளர், காவல்துறை உதவித் தலைவர்,
காவல்துறைத் தலைவர் (ஊர்க்காவல் படை இருப்புப் பாதை காவல்துறை), காவல்துறை கூடுதல்
தலைமை இயக்குநர், தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, பொருளாதார
குற்றப்பிரிவு மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர், தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய
தலைவர் என 34 ஆண்டுகள் அத்துறையில் பணியாற்றி 31.3.2011-இல் பணிநிறைவு பெற்றார்.

இவர் பள்ளியில் பயிலும்போது ஆசிரியருக்காக எழுதிய திருமண வாழ்த்து பலரின் பாராட் டைப்
பெற்றது. ‘தனிமை’ எனும் முதல் கவிதை ‘அமுதசுரபி’ இதழில் வெளிவந்தது. அதைத்
தொடர்ந்து பல கவிதைகள் வெளிவந்தன.

பெண் சிசுக்கொலையை கருவாகக் கொண்ட ‘உதைத்தாலும் ஆண்மக்கள்’ எனும் இவரது முதல் கதை
1987-இல் ‘தினகரன்’ ஞாயிறு மலரில் வெளிவந்தது. இதற்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும்
இவரை ஒரு சிறந்த எழுத்தாளராக செதுக்கியது. “இலக்கியம் என்பது வாழ்க்கை யினின்றும்
பிரித்தறிய இயலாதது. வாழ்க்கையின் பிரதிபலிப்பே இலக்கியம்” என்பதுதான் திலக வதியின்
இலக்கியக் கோட்பாடு.

‘அலை புரளும் கரையோரம்’ எனும் கவிதைத் தொகுதி, ‘கல்மரம்’, ‘கனவைச் சூடிய
நட்சத்திரம்’, ‘ஒரு ஆத்மாவின் டைரி’, ‘உனக்காகவா நான்’, ‘கைக்குள் வானம்’, ‘தீக்குக் கனல்
தந்த தேவி’ ‘வேர்கள் விழுதுகள்’ ஆகியவை இவரது நாவல்கள், இந்நாவல்கள் ‘திலகவதி
நாவல்கள்’ எனும் முழுத்தொகுதியாகவும் வெளியானது. ‘சமதர்மப் பெண்ணியம்’, ‘மானுட
மகத்துவங் கள்’ எனும் நூல்களையும் எழுதியுள்ளார்.

கலைமகள் நாராயணசுவாமி ஐயர் நினைவு குறுநாவல் முதல் பரிசு, அமுதசுரபி மற்றும்
ஸ்ரீராம் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போட்டியில் சிறந்த நாவலுக்கான முதல் பரிசு,
வி.ஐ.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது, தாய் பத்திரிகையின் சிறந்த சிறுகதை விருது,
புதுவை மாநில இலக்கிய விருது, யிஷிஸி சங்கத்தின் 1990ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணி
விருது, கோவை தேவசிகாமணி விருது, பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த நாவலாசிரியர்
விருது, சினிமா கலை மன்ற விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,
இலக்கியச் சிந்தனை பரிசு, ஜோதி வினாயகம் பரிசு, ‘கல்மரம்’ நாவலுக்காக 2005இல்
சாகித்ய அகாதெமி விருது ஆகிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.