| Profession | எழுத்தாளர் |
|---|
கன்னியாகுமரி நாகர்கோயில் அருகிலுள்ள வீரநாராயணமங்கலத்தில் விவசாயி கணபதியாப்
பிள்ளை – சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு 31.12.1947 அன்று பிறந்தார். இயற்பெயர்
க.சுப்பிரமணியன்.
1970-இல் எம்.எஸ்சி. (கணிதம்) பட்டம் பெற்றார். 1972-இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சம்
காரணமாக பம்பாய் நகருக்குச் சென்று, தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில்
வேலைக்குச் சேர்ந்து, மும்பை, கோவை அலுவலகங்களில் கிளை மேலாளராகப் பணியாற்றி,
2005-இல் பணி நிறைவு பெற்றார்.
பம்பாய் வாழ்வின் தனிமை, வெறுமை, வறுமை, சொந்த மண் பற்றிய ஏக்கம், வாழ்க்கைப் பற்றிய
அச்சம், தீவிர வாசிப்பு, இலக்கியத் தேடல், சமகாலப் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம்
இவற்றினால் எழுதத் தொடங்கினார்.
இவரது முதல் கட்டுரை ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் ‘ஏடு’ மாத
இதழில் வெளிவந்தது. 1974இல் ‘தீபம்’ இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது.
அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதையாக ‘இலக் கியச் சிந்தனை’யினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்யம்’ எனும் நூலை ‘நாஞ்சில்நாடன்’
எனும் புனைபெயரில் வெளியிட்டார். அதன் பிறகு அப்பெயரை அவர் பயன்படுத்தவில்லை. ஆகவே,
அதனை இவர் தனது புனைபெயராக சூட்டிக்கொண்டார்.
1977-இல் நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகி தங்கள்’ நாவல் வெளியானது. இதுவரை ஆறு
நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு கவிதைத் தொகுதி, ஏழு கட்டுரைத் தொகுதிகள்
ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது கதைகள் அனைத்தும் ‘நாஞ்சில்நாடன் கதைகள்’ எனும் முழுத்
தொகுதியாக வெளிவந்துள்ளது.
‘தமிழ் வளர்ச்சித் துறை’, கோவை ‘கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை’, ‘புதியபார்வை நீல மலைத்
தமிழ்ச் சங்கம்’ கோவை ‘லில்லி தேவ சிகாமணி அறக்கட்டளை’, ‘திருப்பூர் தமிழ்ச் சங்கம்’,
கோவை ‘கண்ணதாசன் கழகம்’ ‘மயிலாடுதுறை தெய்வத்தமிழ் மன்றம்’, ‘பம்பாய் தமிழ் எழுத்தாளர்
சங்கம்’, கல்கத்தா தமிழ் மன்ற வெள்ளி விழா பரிசு, ‘இலக்கியச் சிந்தனை’, அமுதன் அடிகள்
இலக்கிய மன்றத்தின் ‘வாழ் நாள் சாதனையாளர்’, உலகத் தமிழாசிரியர் மன்றத்தின் நினைவுப்
பரிசு, கனடா ‘இயல்’ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசு களையும் பெற்றள்ளார்.
2010-இல்’சூடிய பூ சூடற்க’ நூலுக்காக ‘சாகித்ய அகாதமி’ விருதையும், 2004-இல் தமிழ்
நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற் றுள்ளார். இவரது நூல்கள் பல்கலைக் கழக பாடத்
திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
இவர் தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.