| Profession | எழுத்தாளர் |
|---|
தஞ்சாவூர், கரந்தையில், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்வி நிலையத் தலைமையாசிரியர்
குப்புசாமி – பருவதத்தம்மையார் இணையர்க்கு 01.08.1932-இல் பிறந்தார்.
பள்ளிக் கல்வியை கரந்தை, அம்மாப்பேட்டை, பாபநாசம், ஈரோடு, தஞ்சாவூர், விருத்தா சலம்,
நன்னிலம் பள்ளிகளில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடை நிலை வகுப்பைப்
பயின்றார். மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை வந்தும் சேராமல், பி.ஏ. ஆனர்ஸ் சேர்ந்து
1955-இல் பட்டம் பெற்றார்.
11.09.1955 அன்று தம் அத்தை மகள் தங்கத்தம்மையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார்.
இவர்களுக்கு மணிமேகலை, தமிழ்ச்செல்வி, கண்மணி என மூன்று மகள்கள், சிவக்குமார், செந்தில்
குமார் என இரு மகன்கள்.
1956-இல் சென்னை சைதை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து கல்வியியலில் இளங்கலைப் பட்டம்
பெற்றார். 1957-இல் கரந்தைப் புலவர் கல்லூரியில் 25 வயது நிறையும் முன்பே துணை முதல்வர்
பொறுப்பை ஏற்றார். சிங்கப்பூரிலிருந்து வெளி வந்த ‘தமிழ் முரசு’ இதழில் கட்டுரைகள்,
கதைகள், ஆய்வுகள் எழுதினார்.
1958-இல் கோவை அரசு கலைக் கல்லூரியில் இரு மாதங்கள் பணியாற்றிய பின், 1959-இல்
குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றினார். 1965-இல் இந்தி எதிர்ப்பு
நட வடிக்கையில் ஈடுபட்டதற்காக ஏப்ரல் திங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டார். சூலை 1-ஆம் நாள்
கரந்தைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1968-இல் அப்பொறுப்பி லிருந்து
விலகினார். 1969-இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழைப்பை ஏற்று திருநெல்வேலி
மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
தந்தையின் இறப்பினால் 1971-இல் அப்பொறுப்பிலிருந்து விலகினார். 1976-இல் தமிழ்நாடு சட்ட
ஆட்சிமொழி ஆணை யத்தின் மொழிபெயர்ப்பாளர் பணியில் சேர்ந் தார்.
1988-இல் புதுவை சட்டத்துறை மொழி பெயர்ப்புச் சிறகத்தில் முதன்மை மொழிபெயர்ப் பாளராக
பணியேற்றார். 1900-இல் பணி நிறைவு காலத்துக்குப் பின்னரும் புதுவை அரசு மேலும்
ஈராண்டுகள் பணி வாய்ப்பு வழங்கியது. 3000 தட்டச்சுப் பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய பணியை
நிறைவு செய்வதற்காக, புதுவை மொழி யியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முது நிலை
ஆய்வறிஞர் பணி வழங்கப்பெற்றார். சொற்களஞ்சியப் பணி நிறைவுற்ற பின்னர், சென்னை பல்கலைக் கழக
தமிழ்மொழித் துறை யில் பேரகராதித் திருத்தத் திட்டத்தில் பதிப்பாசிரியர் பணியை ஏற்றார்.
2007-இல் மைசூரிலுள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு சிறகமாக உருவான
செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தில் 2007-இல் ஆய்வு வல்லுநராகப் பொறுப்பேற்றார்.
2008-இல் சென்னைக்கு மாறியபோது சிவமணியார் ஆய்வறிஞராகத் தொடர்ந்தார். 2014-இல்
பணிநிறைவு பெற்றார்.
இலக்கியம், புதினம், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறை சார்ந்த பல சிறந்த
நூல்களை எழுதியுள்ளார்.