பரிதிதாசன்

பரிதிதாசன்

Profession எழுத்தாளர்

Biography

கோலாலம்பூரில் உள்ள ஒரு சிற்றூரில் திரு.லெ.பொன்னு சாமி – திருமதி க.சாரதாம்பாள்
தம்பதியருக்கு 24.8.1934 அன்று பிறந்தார். இயற்பெயர்: வெங்கடேசன்.

தமது இளம் வயதில் சன் பெங் ரோடு யாழ்பாணத்தார் கம்பன் ஒன்றில் இவர் வசித்து வந்தார்.
அப்பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்குப் பணியாற்ற வந்த குருக்களின் துணையோடும், தமிழ்
நாட்டிலிருந்து வந்த கணக்காயர் ஒருவரிடமும் தமிழ் மொழியினைக் கற்றார். ஆங்கில
இலக்கியங்களையும் ஆவலுடன் கற்றார். 1941 – 1945 ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் ஜப்பானிய
மொழியைக் கற்றார். 1945-க்குப் பிறகு ஆங்கிலேயர் கை ஓங்கிய பிறகு ஆங்கிலம் கற்றார்.

அகவையில் 1951-இல் தமிழ் ஆசிரியரானார். சன் பெங் ரோடு பள்ளியில் எட்டு ஆண்டுகள்
பணிபுரிந்தார். 1959-இல் தமிழ்ப் பள்ளிகளின் கண் காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மலேசியக் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடநூல்களின் அலுவலராக 1968-இல் நியமிக்கப்பட்டார்.
இதே காலகட்டத்தில் பள்ளிகளின் கல்வித்துறைப் பதிவதிகாரியாகவும் பணிபுரிந்ததார்.

1970-இல் மலாயாப் பல்கலைக் கழக தமிழ்த் துறையில் பட்டம் பெற்று, செயிண்ட் ஜோன் உயர்நிலைப்
பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியேற்று 1989-இல் பணி ஓய்வு பெற்றார். அதன் பின்னும் 5
ஆண்டுகள் சிலாங்கூர் மாநிலத் தேர்வாணைக் குழுவில் பணியாற்றினார்.

இவரது துணைவியார் ஜானகி. இவர் மலாயாப் பல்கலைக் கழகப் பட்டதாரி. மலாயாப் பல்கலைக்
கழகத்தில் கல்வி கற்கும் போது அன்புகொண்டு, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று
குழந்தைகள்.

தமிழ்ப் படைப்புலகில் 1951-இ¢ல் நுழைந்த இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்,
ஹைக்கூக்கள் என 500க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை வழங்கியுள்ளார்.

‘பறந்து வந்த பைங்கிளிக்கு’ (1980), பரிதி தாசன் சிறுகதைகள் (1998), பரிதிதாசன்
கட்டுரைத் திரட்டு (1998), பரிதிதாசன் கருவிதைகள் (1997), ‘எல்லோருக்கும் ஏற்ற எளிய
இலக்கணம்’ (2001), பி.எஸ்.பரிதிதாசன் ஹைகூவும் உணர்வுக் கவிதைகளும் (2014) ஆகிய
நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதை களை ஆய்வு செய்து ஒருவர் முனைவர் பட்டம்
பெற்றுள்ளார்.

இவரது தமிழார்வத்தையும் தமிழ்த் தொண்டினையும் சிறப்பிக்கும் வகையில் திருக்குறள்
முனுசாமி இவருக்கு ‘எழுகதிர்’ எனும் விருதினை வழங்கினார். இவரை எழுத்தாளர்
கு.அழகிரிசாமி ‘தாகூர்’ என்று அழைத்து சிறப்பித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டதோடு பல பொறுப்பு களையும் வகித்து
சமூகப் பணியாற்றினார்.

தமிழ் போதனாமுறையில் 3 ஆண்டுகள் சனிதோறும் கற்று, தேர்ச்சி பெற்று, 17-ஆவது 2015
ஜனவரி 30 அன்று காலமானார்.