க.வை.லிங்கம்

க.வை.லிங்கம்

Profession எழுத்தாளர்

Biography

மலேசியாவில் சிலாங்கூர் பத்துதீகா இராசாக் தோட்டத்தில் 2.1.1942-இல் பிறந்தார்.

அதன்பின் இவரது குடும்பத்தினர் மலாக்கா மாநிலத்தில் உள்ள புக்கிட் அசகான் தோட்டத்திற்கு
பிழைப்பு தேடிக் குடியேறினர். பெற்றோர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டனர். அங்கு லிங்கம்
ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர் அம்மாவுடன் பால் வெட்டும் வேலைக்குச் சென்றார்.
பின்னர், மலாக்காவில் ஒரு காபி கடையில் தங்கி வேலை செய்தார். இரவு பகலாக உழைத்தும்
கடை முதலாளிக்கு தன்னிடம் நன்றியுணர்வு இல்லை என்பதை உணர்ந்தவுடன் அவ்வேலையிலிருந்து
விலகி, பெற்றோரிடம் வந்து சேர்ந்தார்.

எப்படியாவது ஏழாம் வகுப்பு தேறிவிட்டால் தமிழாசிரியராகி விடலாம் என முடி வெடுத்து,
தோட்டத்தில் பால் மரம் வெட்டிக்கொண்டே மலாக்கா தமிழ்ப் பள்ளியில் படித்து ஏழாம் வகுப்பில்
தேர்ச்சி அடைந்தார். ஆசிரியர் ஆயத்தப் பரிட்சைத் தேர்வில் தேறிய பின்னரும் அவருக்கு அரசு
ஆசிரியர் வேலை தர வில்லை.

1963-இல் ‘தமிழ்ப் பூங்கா’ என்றொரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராகப்
பணியாற்றினார். ஆனால், பொருளாதாரச் சிக்கலினால் அப்பத்திரிகையை அவரால் தொடர்ந்து நடத்த
முடியவில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து மலேசியாவிற்கு 1957-இல் சுதந்திரம் கிடைத்தது.
1958-இல் ம.இ.கா.வில் உறுப்பினரானார்.

தமிழ்ப் போதனா முறை வகுப்பை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக
1962-இல் ஆசிரியர் ஆயத்தப் பரிட்சையில் தேர்வு பெற்றோர் சங்கத்தை உருவாக்கி தலைவராகச்
செயல்பட்டார். அதற்காக 1964-இல் நான்கு நாட்களும், 1966-இல் பதினோரு நாட்களும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது தந்தை உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதனால் 105 பவுண்ட் எடையுள்ள லிங்கம் 13
பவுண்ட் குறைந்து 92 பவுண்டு எடைக்கு உடல்நிலை மாறியது. இன்று நாட்டின் பல
பாகங்களிலும் தமிழாசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றும் பலருக்கு
க.வை.லிங்கத்தின் இந்த உயிர்ப் போராட்டமே காரணம் ஆகும்.

1969-இல் ஷா ஆலாமில் குடியேறினார். தொடர்ந்து கில்லான் மணி மன்ற உறுப்பினராகி பகுதிப்
பொறுப்பாளராக சிறிது காலம் பணி யாற்றினார். 1970-இல் ‘திருக்குறள் மன்றம்’ அமைத்து
அதன் தலைவராக செயல்பட்டார்.

அப்போது கிள்ளானில் தமிழ்க் கலைஞர் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டில் ‘கலைஞர் இயக்கம்’
அமைக்க முன்மொழியப் பட்டது. 1978 முதல் 1989 வரை சிலாங்கூர் மாநில மணி மன்றப்
பேரவையின் தலைவராக பொறுப்பேற்றார்.

அப்பேரவையின் தேசிய உதவித் தலைவராகவும, பொதுச் செயலாள ராகவும் பணியாற்றினார்.
1986-இல் மலேசிய இந்தியர் காங்கிரஸ் ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினராகவும், 1994
முதல் 1997 வரை ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1983-இல்
இளைஞர் தலைவர்களுக்கான விருதையும், 1990-இல் மாமன்னர் விருதையும் பெற்றுள்ளார்.

இவர் ‘தலைமைத்துவம்: ஓர் உயிர்ப் போராட்டம்’ எனும் நூலை எழுதியுள்ளார். 2007-இல்
‘மலேசிய தங்கத் தமிழ் மணி மன்றம்’ தொடங்கி அதன் அமைப்புச் செயலாளராக தற்போது பணியாற்றி
வருகிறார்.