அ.ஆறுமுகனார்
அரியலூர் சாத்தநத்தம் கிராமத்தில், வேளாண் குடும்பத்தில் அமிழ்தம் -அருணாச்சலம் இணையருக்கு 11.06.1933-இல் பிறந்தார். சாத்நத்தம், திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1951-இல் திருச்சியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக வித்துவான், இளங்கலை, முதுகலை, முனை வர்ப் பட்டங்களைப் பெற்றார். 1953-இல் தாம் படித்த சாத்தநத்தம் உயர்நிலைப் பள்ளியிலேயே இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1955-இல் கீழப்புலியூர், 1956-இல் கூடலூர், 1960-இல்…
