| Profession | பேராசிரியர் |
|---|
அரியலூர் சாத்தநத்தம் கிராமத்தில், வேளாண் குடும்பத்தில் அமிழ்தம் -அருணாச்சலம் இணையருக்கு
11.06.1933-இல் பிறந்தார்.
சாத்நத்தம், திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில்
பள்ளிப்படிப்பை முடித்தார். 1951-இல் திருச்சியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிப்
பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின்
வாயிலாக வித்துவான், இளங்கலை, முதுகலை, முனை வர்ப் பட்டங்களைப் பெற்றார்.
1953-இல் தாம் படித்த சாத்தநத்தம் உயர்நிலைப் பள்ளியிலேயே இடைநிலை ஆசிரியராகப்
பணியேற்றார். 1955-இல் கீழப்புலியூர், 1956-இல் கூடலூர், 1960-இல் துவரங்குறிச்சி,
1961-இல் பெரம்பலூர், 1963-இல் செட்டி குளம், 1969-இல் இலப்பைக்குடிக்காடு ஆகிய
ஊர்களிலுள்ள பள்ளிகளில் பணியாற்றிய பின், 1972-இல் திருச்சி பெரியார் கல்லூரியில்
தமிழ்ப்பயிற்றுநர் ஆனார். 1973-இல் அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றலானார். 1974-இல் தஞ்சை
சரபோசி கல்லூரி, 1975-இல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் துணைப்
பேராசிரியர் ஆனார். 1977-இல் சேலம் அரசு கல்லூரி, 1979-இல் இராசிபுரம் திருவள்ளுவர்
அரசுகல்லூரி, 1986-இல் அரியலூர் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி 1991-இல் பணிநிறைவு
பெற்றார்.
படித்த பெண்ணை மணம் புரியவேண்டும் என்ற தன் விருப்பத்திற்கேற்ப 11ஆம் வகுப்புவரை படித்த
சாரதாம்பாள் இவரது துணைவியானார். இவர்களுக்கு திருவள்ளுவன், மறைமலை, இளங் கோவன்,
பாவேந்தன், எழிலரசன் என்ற ஐந்து மகன்கள்; அல்லி என்றொரு மகள்.
‘பிறந்த மண்ணின் பிடி வரலாறு’, ‘தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்’ ஆகிய வரலாற்று
நூல்களையும், ‘ஆ.செ.தங்கவேலு வாழ்க்கை வரலாறு’, ‘தன்மானத் தமிழ் மறவர்’, ‘வண்டமிழ்
வளர்த்த வரதராசனார்’, ‘பெரியார் கண்ட பேரறிஞர் வே.ஆனைமுத்து’, ‘ஆந்திரங் கண்ட
அருந்தமிழ்’ ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும், ‘என்னையே நான்’, ‘தாய் தந்த வாழ்க்கைத்
தேன்’ ஆகிய தன் வரலாற்று நூல் களையும், ‘எண்ணித் துணிக’, ‘திருக்குறள் நினைவேடு’,
‘குறள் விருந்து’, ‘திருக்குறளில் புதிய பார்வை’, ‘வழியடைக்குங்கல்’, ‘திருக்குறள்
தெளிவும் கருத்தும்’ ஆகிய திருக்குறள் குறித்த நூல்களையும், ‘சிலம்பும் நாட்டார்
உரையும்’, ‘கவி வேந்தரின் கருத்துச் சோலை’, ‘தமிழராய் வாழ் வோம்’, ‘வாழ்வியல் வளங்கள்’,
‘வள்ளுவமும் பெரியாரியமும்’, ‘புத்தமும் பெரியாரியமும்’, ‘குயில் தந்த முத்தம்’,
‘வளர்தமிழ் வழிகாட்டி’, ‘சங்க இலக்கியத்தில் குடும்பம் உடைமை அரசு’, ‘பாவேந்தர் தந்த
பரிசு’ ஆகிய திறனாய்வு நூல் களையும், மற்றும் ‘நாட்டுப்புற இலக்கியமும் பண் பாடும்’,
‘அந்தமிழ் கண்ட அந்தமான்’, ‘ஊர்வல உணர்வுகள்’, ‘சிலம்பின் மூன்று ஒலிகள்’, ‘படைப்பு
வேந்தரின் பன்முகப் பார்வை’, ‘முந்துமா முதுமை’, ‘அரசியல் இமயம் அண்ணா ஆகிய
நூல்களையும் எழுதியுள்ளார்.