| Profession | பேராசிரியர் |
|---|
வடஆற்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், இரகுநாத சமுத்திரத்தில் அங்கம்மாள் -பூங்காவனம்
இணையருக்கு 02.07.1927 அன்று பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை இரகுநாத சமுத்திரத்திலும், சாத்தம்பாடியிலும் பயின்றார். பின்னர்
1946-இல் செங்கல்பட்டில் அமைந்திருந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்ப ஆசிரியப்
பயிற்சி பெற்றார்.
1947 முதல் இரகுநாத சமுத் திரத்திற்கு அருகிலமைந்துள்ள ஊர்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியப்
பணியை மேற் கொண்டார். பள்ளி இறுதித் தேர்வைத் தனி நிலையில் எழுதித் தேர்வு பெற்று,
மயிலம் சிவஞான சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்து வான் பட்டம் பெற்றார்.
1953முதல் மேட்டூர் அணை கோத்தகிரி (நீலகிரி) அரசினர் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் தனித்த நிலையில் தேர்வு களை எழுதி
பி.ஏ., பி.லிட்., எம்.ஏ. முதலான பட்டங்களையும் வடமொழியில் பட்டயத்தையும் பெற்றார்.
பின்னர் 1963-78இல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை, அரசினர் கீழ்த்
திசைச் சுவடிகள் நூலகத்தில் ‘தமிழ் பண்டிட்’ பதவி வகித் தார். அக்காலத்தில் ஆறுசுவடிகள்
விளக்க அட்டவணைகளை உருவாக்கினார். அரையாண்டுக்கு ஒரு முறை வெளிவந்த பருவ இதழில் 7
சுவடிப் பதிப்புகளை வெளிக்கொணர்ந்தார். அவற்றுள் 5 சுவடிப் பதிப்பு நூல்களைத் தனித்த
நிலையிலும், 2 சுவடிப் பதிப்பு நூல்களை அந்நூல கத்தின் காப்பாட்சியாளராகப் பணியாற்றிய
கே.ஆர்.பார்த்தசாரதியுடன் இணைந்து பதிப்பித்தார். 1979-83இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகப் பணியாற்றினார்.
பணி ஓய்வுக்குப் பிறகும் மீண்டும் 1985-92இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியில்
சேர்ந்து சுவடியியல் மாணவர்களுக்குக் கற்பித்தார். 1979-92 காலத்தில் அறுபது ஆய்வேடுகள்
உருவாக்குவதற்கு நெறியாளராக இருந்து வழிகாட்டினார். அவற்றில் பதினைந்து ஆய்வேடுகள்
நூல்களாக வெளிவந்துள்ளன.
பேரூர்த் தமிழ்க் கல்லூரி, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் முதலான நிறுவனங்களில்
பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். சென்னை பேரூர்த் தமிழ்க் கல்லூரி போன்றவற்றில் புலவர்,
பி.லிட்., எம்.ஏ. முதலான வகுப்புகளுக்கு இலக்கணம், இலக்கியம், கல்வெட்டுகள் தொடர்பான
பாடங்களை நடத்தினார்.
கணிதம் தொடர்பான மூன்று நூல்களின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அவற்றை
சுவடிப்பதிப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
தன் 66 ஆவது அகவையில் (1993) சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் சுவடியியல் துறைத்
தலைவராகப் பொறுப்பேற்று 76-ஆவது அகவை வரை பல்வேறு குறிப்பிடத்தக்க பணி களை
நிறைவேற்றினார்.
நிறுவனங்களுக்காகச் சுவடி நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தவர், ஆருட சோதிடம் (1989),
மனையடி சாஸ்திரம் (1995) ஆகிய இரு நூல் களை தன் சொந்த வெளியீடுகளாக வெளியிட்டார்.
1958-இல் திருமணம். இளங்கோ, இளவரசு, இளம்வேள் என மூன்று மகன்கள்; கலைச் செல்வி,
தமிழ்ச்செல்வி என இரு மகள்கள்.
இவருக்கு சென்னை கே.கே.நகர் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ‘சுவடிச்சுடர்’
விருதும் (2008), கும்பகோணத்தில் நடைபெற்ற உ.வே.சா. ஆண்டுவிழாவில் ‘உ.வே.சா.வின்
வழித்தோன்றல்’ என்ற விருதும் வழங்கப்பட்டன.