ஊரன் அடிகளார்
திருச்சி , சமயபுரம் கண்ணனூர், நரசிங்கமங்கலத்தில் இராமசாமிப்பிள்ளை – நாகரத்தினம் அம்மையாருக்கு 1933-இல் பிறந்தார். இயற்பெயர் குப்புசாமி. பள்ளி, கல்லூரி ஆவணங்களில் ‘என்.ஆர்.குப்புசாமி’ என்ற பெயரே இருக்கும். 1967-இல் துறவு பூணும்போது ‘ந. இரா. ஊரன்’ என்று மாற்றிக் கொண்டார். ‘ஊரன் அடிகள்’ என அனைவராலும் அழைக்கப்படு கிறார். சமயபுரம் எஸ்.கண்ணனூர், ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பைப் படித்தார். திருச்சி தேசிய கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். கரந்தைப் புலவர் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து படித்தார். அப்போது கல்லூரியைப்…
